LGBTQ+: ஜூனில் பிரைட் மாதம் கொண்டாடப்படுவது ஏன்? ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியின் அர்த்தம் என்ன?
சென்னை: உலகம் முழுவதிலும் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான சட்ட உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பிரைட் மாதம் (pride month) கொண்டாடப்படுகிறது.
Recommended Video
LGBT என்றால் என்ன? Lesbian, Gay, Bisexual and Transgender ஆகும். இவ்வாறு வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறிக்கப்படும் சொல்தான் எல்ஜிபிடி கம்யூனிட்டி ஆகும்.
ஓரின சேர்க்கை, ஒரு பால் ஈர்ப்பு என்பது பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. உலகில் மொத்தம் 28 நாட்களில் மட்டுமே ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கின்றன.

சட்ட உரிமைகள்
இந்த சமூகத்தினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் சட்ட உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பிரைட் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. 50 ஆண்டுகளாக இந்த மாதம் கொண்டாடப்பட்டு வந்தாலும் ஓரின சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானது என்றும் குற்றச்சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை
1960 களில் ஓரின சேர்க்கை என்பது மனநல குறைபாடாகவே பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. ஓரீன சேர்க்கையாளர் என சந்தேகம் இருந்தாலே அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

ஆங்கிலேய அரசு
1870 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்த ஓரின சேர்க்கைகள் இயற்கைக்கு மாறான செயலாக கூறி அதற்கு எதிரான சட்டங்களை வகுத்து வைத்திருந்தன. இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை இருந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாஸ் பவுன்டேஷன் எனும் அமைப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவில் எப்படி
2018 ஆம் ஆண்டில் பல முயற்சிகளுக்கு பிறகு இந்திய தண்டனை சட்டத்தின் 377 ஆவது பிரிவின் ஒரு பகுதி, சமத்துவத்திற்கு எதிரானது என்பதால் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றிற்கு திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கிறது.

தாக்குதல்
இந்த சமூகத்து மக்களை போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. அது போல் இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்கிறார்கள். எனவே இவர்கள் படும் துன்பங்கள், துயரங்கள்,. வேதனைகள், கஷ்டங்கள், சட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள்
கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இணைந்து தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினர். இதன் நீட்சியாகவே ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பிரைட் மாதம் கொண்டாடப்படுகிறது. இவர்களுக்கென கொடியும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த கொடியில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம். ஊதா ஆகிய நிறங்கள் காணப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடி
இவை ஓரினசேர்க்கையாளர்களின் ஒற்றுமையை குறிக்கின்றன. இவை ரெயின்போ நிற கோடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஓரின சேர்க்கை சமூகத்தில் உள்ள பாலினங்களையும் இந்த நிறங்கள் குறிக்கின்றன. சிவப்பு நிறமானது வாழ்க்கையையும், ஆரஞ்ச் நிறமானது குணப்படுத்துதலையும் மஞ்சள் நிறமானது சூரிய வெளிச்சத்தையும் பச்சையானது இயற்கையையும் நீலமானது அமைதியையும் ஊதா நிறமானது ஆன்மாவையும் குறிக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications