தெரிஞ்சுக்கோங்க.. கேஸ் சிலிண்டர்கள் ஏன் ரெட் கலரில் இருக்கு தெரியுமா? எல்பிஜி கேஸில் இவ்ளோ மேட்டரா?
சென்னை: மிகவும் கவனமாகவும், ஜாக்கிரதையுடனும் கையாளக்கூடியது கேஸ் சிலிண்டர்கள்.. இந்த சிலிண்டர்களின் நிறம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது தெரியுமா?
அன்றாடம் வீடுகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தினாலும், இந்த நுணுக்கத்தை பலரும் அறிவதில்லை.. சிகப்பு கலரில் மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட காரணம் உள்ளது.

சிவப்பு நிறம்: பொதுவாக சிவப்பு என்பது ஆபத்தைக் குறிக்கக்கூடியது.. ஆபத்து எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. சாலைகளில் பள்ளம் நோண்டி, பணிகள் மேற்கொண்டிருந்தாலும் இந்த சிவப்பு நிறம்தான் பயன்படுத்தப்படுகிறது. ரயிலில் ஆபத்து ஏற்பட்டாலும் சிவப்பு நிறமே பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு நிற துணி அல்லது பலகைகளை இதற்காக பயன்படுத்துவார்கள்.
இந்த நிறத்தை பார்த்ததுமே, ஆபத்து என்பதை பலரும் அறிந்து கொள்வார்கள.. அத்துடன், கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவும், இந்த சிவப்பு நிறம் அலர்ட் செய்யப்படுகிறது. அந்தவகையில், கேஸ் சிலிண்டரும் அபாயமான, ஆபத்தான ஒன்றாகும்.. சிறிய அளவு கசிந்துவிட்டாலும், பெருத்த நஷ்டத்தை தந்துவிடும்.. அதனால்தான், சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப்படுகிறது.
அலைநீளம்: இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. எப்போதுமே, தொலை தூரத்திலிருந்து பார்த்தாலும், மற்ற நிறங்களைவிட சிவப்பு நிறமே பளிச்சென தெரியும்.. இந்த சிவப்பு நிறமானது நிறமாலையில் மிக உயர்ந்த அலைநீளத்தை கொண்டிருக்கிறது..
மேலும், காற்று மூலக்கூறுகளால் குறைந்தபட்சம் சிதறடிக்கப்படுகிறது. எனவே, சிலிண்டர்களில் சிவப்பு நிறம் பயன்படுத்த இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. இந்த சிவப்பு நிறத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டவே, வணிக பயன்பாடு சிலிண்டருக்கு நீலநிறங்கள் தரப்பட்டுள்ளதாம்.
ஆபத்து நிறத்தை குறிக்க மட்டுமே கேஸ் சிலிண்டர்களில் சிவப்பு நிறம் தரப்படுகிறது. மற்றபடி உபயோகிக்கும்போது, ஒவ்வொரு முறையும் கவனமாக இருந்தாலே ஆபத்துக்களை தவிர்த்துவிடலாம். இதற்கு ஒருசில டிப்ஸ்களை கையாண்டால் போதும்.
கேஸ் சிலிண்டர்கள்: எப்போதுமே கேஸ் சிலிண்டரை பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேஸ் ஸ்டவ்வை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, அதற்கு பிறகே வால்வை மூட வேண்டும்.
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு, சிலிண்டரை மாற்ற வேண்டும்.. ஏதாவது ரிப்பேராகிவிட்டால், விற்பனையாளர்களை அழைத்து சரிசெய்ய வேண்டுமே தவிர, நாமே இந்த விபரீதத்தில் இறங்க கூடாது..
வால்வுகள்: கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பது தெரிந்தால், உடனடியாக கதவுகள், ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்... சிலிண்டர் வால்வை அழுத்தி மூடிவிட வேண்டும். மாற்று சிலிண்டர்களை இணைக்க நேர்ந்தால், பூஜை விளக்குகள், ஊதுவத்தி உட்பட கரண்ட் சம்பந்தமாக எதையுமே இயக்க கூடாது.












Click it and Unblock the Notifications