சென்னையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.. அழகு நிலைய உரிமையாளர் கைது
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் என்பவர் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு மற்றொரு அழகுநிலையத்தில் பணிபுரிந்து வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய காதல் ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த நம்பிராஜனின் மனைவி, என்ன செய்தார் தெரியுமா? அதனால் அவரது கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த 30 வயதாகும் நம்பிராஜன் என்பவர், சென்னை புரசைவாக்கம் பகுதியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார். நம்பிராஜனும் , தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த 30 வயதாகும் நவீனா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். நவீனா பி.சி.எஸ். படித்திருக்கிறார். இவர்களின் திருமணம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் சாய்சுலாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், நம்பிராஜனுக்கு மற்றொரு அழகுநிலையத்தில் பணிபுரிந்து வரும் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாம். பின்னர் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த 4 நாட்கள் முன்பு நண்பர் ஒருவர் மூலம் நவீனாவுக்கு தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த நவீனா இது பற்றி கணவரிடம் கேட்டிருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நம்பிராஜன் தொடர்ந்து அந்த பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 27-ந்தேதி குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அதில் நவீனா கணவனை பிரிந்து வாழ முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் நவீனாவை குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
எனினும் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் நவீனா மிகுந்த மனவருத்தத்தில் இருந்த நிலையில் இரவு வீட்டில் உள்ள அறையில் நவீனா மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு உயிரையே மாய்த்துக் கொண்டாராம். இந்த நிலையில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக நவீனாவின் தாய் பிரிமளா காசிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் நம்பிராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications