"இந்த டைமில் தேவையின்றி வெளியே போகாதீங்க".. மக்களுக்கு அமைச்சர் மா.சு முக்கிய வார்னிங்! ஏன் தெரியுமா
சென்னை: தமிழ்நாடு மக்கள் 11 மணி முதல் 3 வரை வெளியே செல்ல வேண்டாம். அவசியம் இல்லாத பட்சத்தில் இந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

வெப்பநிலை: ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மக்களுக்கு முக்கியமான அறிவுரைகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில்,
இந்த வெயில் காலத்தில் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் உடல் சூட்டை ஏற்றும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கார்பன் ஏற்றப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும், இயற்கையான குளிர்பானங்களை மட்டுமே குடிக்க வேண்டும்.

அதிக புரதசத்து கொண்டு உணவுகள் உடல் வெப்பத்தை கூட்டும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிற்பகல் நேரத்தில் தேவையின்றி வெளியே செல்ல கூடாது.
முக்கியமாக 11 மணி முதல் 3 வரை வெளியே செல்ல வேண்டாம். அவசியம் இல்லாத பட்சத்தில் இந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. நேற்று சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications