கவனிச்சீங்களா ஸ்டாலினின் வலைதள முகப்பை.. தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்.. திமுக இன்று பொதுக்கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் செப்டம்பர் 20, 21 தேதிகளில் திமுக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று தலைமைகழகம் அறிவித்திருந்தது. இந்த கூட்டங்களில் உரை நிகழ்த்த போகும் பேச்சாளர்களின் லிஸ்ட்டையும் அறிவிப்பாக திமுக வெளியிட்டிருந்தது. அதன்படியே இன்றைய தினம் பொதுக்கூட்டங்களை திமுக நடத்த போவது, தொண்டர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

கடந்த ஜூலை மாதம் திமுக சார்பில் "ஓரிணியில் தமிழ்நாடு" என்ற பிரச்சார இயக்கத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் திமுகவில் இணைந்த குடும்பத்தினர், "தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்" என உறுதிமொழி ஏற்றிருந்தனர்..

Stalin tamizhanai thalai kuniya vidamatom DMK

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம்

சென்னையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை படிக்க மற்றவர்கள் அதனை பின்தொடர்ந்து உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டனர்.

இதேபோல மாநிலம் முழுவதிலுமே திமுகவினர் சார்பில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகளில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு பகுதியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, வரும் செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'தமிழ்நாட்டின் மண்-மொழி மானம் காக்க கழகத் தலைவர் முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தி.மு.க மாவட்ட வாரியாக நடைபெறும்' என்று அறிவித்தது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவோர் விவரங்களையும் பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் - பொதுக்கூட்டம்

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கான பொதுக்கூட்டத்தை திமுக இன்று செப்டம்பர் 20, நாளை 21 தேதிகளில் திமுக நடத்த உள்ளது. இதில் இன்று சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் உரையாற்ற உள்ளவர்கள் விவரம் இதுதான்:

காஞ்சிபுரம் வடக்கு-கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., திருவாரூர்-முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கரூர் - துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., கோவை வடக்கு - துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி, கன்னியாகுமரி கிழக்கு - துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணநிதி, எம்.பி, நாமக்கல் கிழக்கு - துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., திருப்பூர் வடக்கு - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை வடக்கு-முனைவர் க.பொன்முடி, திண்டுக்கல் கிழக்கு- பொன். முத்துராமலிங்கம், மதுரை வடக்கு - எஸ்.எஸ். பழநிமாணிக்கம், திருவண்ணாமலை வடக்கு- சுப.வீரபாண்டியன், ஈரோடு தெற்கு - கோவி.லெனின், சென்னை வடக்கு - கவிஞர் மனுஷ்யபுத்திரன், விருதுநகர் வடக்கு - கம்பம் பெ.செல்வேந்திரன்,

தஞ்சை மத்திய - சபாபதி மோகன், தருமபுரி மேற்கு - பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திருநெல்வேலி கிழக்கு - ப. தாயகம் கவி, கடலூர் கிழக்கு - வழக்கறிஞர் இரா. ராஜீவ்காந்தி, வேலூர் - டாக்டர் எழிலன் நாகநாதன், பெரம்பலூர் - ஏ.கே.எஸ்.விஜயன், சேலம் மேற்கு - வழக்கறிஞர் இ.பரந்தாமன்

பேச்சாளர்கள் விவரம்

திருவள்ளூர் மத்திய - சி.வி.எம்.பி. எழிலரசன், திருப்பூர் கிழக்கு - கவிஞர் சல்மா, எம்.பி.,திருநெல்வேலி மத்திய - வே.மதிமாறன், சேலம் மத்திய - சூர்யா கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் வடக்கு - வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ்

தேனி தெற்கு - ஈரோடு இறைவன், திருச்சி தெற்கு - தமிழன் பிரசன்னா, புதுக்கோட்டை வடக்கு - சைதை சாதிக், மதுரை தெற்கு - எஸ்.கே.பி.கருணா, சேலம் கிழக்கு - வாகை சந்திரசேகர், தென்காசி வடக்கு - வழக்கறிஞர் மதிவதனி, தென்காசி வடக்கு - ஆண்டாள் பிரியதர்ஷினி, தூத்துக்குடி வடக்கு - சூர்யா வெற்றிகொண்டான், கோவை மாநகர் - சூர்யா சேவியர், திருச்சி வடக்கு - டான் அசோக், கள்ளக்குறிச்சி தெற்கு - தமிழ் கா.அமுதரசன், கிருஷ்ணகிரி மேற்கு- வி.சி. சந்திரகுமார், திருப்பூர் தெற்கு - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றயுள்ளனர்.

பொதுக்கூட்டத்தை திமுக இன்று செப்டம்பர் 20, நாளை 21 தேதிகளில் திமுக நடத்த உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.

முதல்வரின் எக்ஸ் தளம்

அதேபோல, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமாக, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற வாசகத்தை முதல்வர் தன்னுடைய எக்ஸ் தள முகப்பில் தற்போது வைத்திருக்கிறார். வழக்கமாக அரசியல் ரீதியான கருத்தக்களை பதிவிட்டு வரும் நிலையில், முதல்வரின் இந்த வாசகம் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+