வா.. வா.. நில்லு.. நில்லு.. தீர்ப்பு வந்ததும் எடப்பாடி வீட்டில் நடந்த சம்பவம்.. இதை நோட் பண்ணீங்களா!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதிமுகவில் வார வாரம் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் இந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கில் இன்று காலை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி பொதுவில் தொண்டர்களை பார்க்காமல் இருந்தார். ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதன்பின் திருச்சியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார். இதில் ஓ பன்னீர்செல்வம் பற்றி பேசாமல், திமுக பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்தார். முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மட்டும் கடுமையான புகார்களை வைத்தார்.

சோகம்
மற்றபடி எடப்பாடி பெரிதாக தொண்டர்களை சந்திக்கவில்லை. அதோடு எடப்பாடி பழனிசாமி முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு மட்டும் மிஸ்ஸானது. அவர் முகம் கொஞ்சம் வாடிப்போய் காணப்பட்டது. ஏனென்றால் அதிமுகவில் அவரின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு இருந்தது. அதோடு மேல்முறையீட்டு வழக்கிலும் அவருக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என்று கணிப்புகள் கூறப்பட்டது. இதனால் எடப்பாடி கொஞ்சம் அமைதியாகவே இருந்தார்.

சந்தோசம்
ஆனால் இன்று தீர்ப்பு வந்ததும் எடப்பாடி உற்சாகம் அடைந்தார். அவரை பார்க்க தொண்டர்கள் பலர் அவரின் வீட்டின் முன் குவிந்தனர். அவரின் வீட்டின் முன் அடுத்தடுத்து வெடிகள் வெடிக்கப்பட்டன. சேலம் மற்றும் சென்னை வீடு இரண்டிலும் நிர்வாகிகள் குவிந்து வெடிகளை வெடித்தனர். அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு ஸ்வீட் கொடுத்தனர். இன்று தீர்ப்பு வரும் முன்பே மாஜி அமைச்சர்கள் நம்பிக்கையாக எடப்பாடியை சென்று நேரில் சந்தித்தனர்.

எடப்பாடி
அதன்பின் வெளியே வந்து தொண்டர்களை எடப்பாடி சந்தித்தார். அவரிடம் நின்று பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வா.. வா.. நில்லு.. நில்லு என்று கூறி பலரை அருகில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். எடப்பாடி முகத்தில் முன்பு இல்லாத மகிழ்ச்சி இன்று காணப்பட்டது. அவரின் முகம் பொலிவோடு காணப்பட்டது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து வெளியே வந்த மாஜி அமைச்சர்களும் தீர்ப்பு சாதகமாக வந்த சந்தோஷத்தில் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications