சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பர் 1" முதல்வர் ஸ்டாலினாமே.. அவருக்கு நக்கலை பாத்தீங்களா.. எடப்பாடிக்கு ஒரே சிரிப்பு.. 3 சேஞ்ச்

எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சரமாரியாக விமர்சித்து சிவகாசியில் பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஆமா.. இந்தியாவிலேயே ஸ்டாலின்தான் முதன்மை முதலமைச்சராமே" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டு கிண்டிலடித்துள்ளார்.. அத்துடன், திமுக அமைச்சர்கள் குறித்து சரமாரியான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

எடப்பாடியின் தென்மண்டல சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு காரணம், தென்மண்டலத்தில் தனக்கான ஆதரவை நிரூபிக்க எடப்பாடி மேற்கொள்ளும் அடுத்த யுக்தி என்றாலும், தேவர் சமுதாய மக்களை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்தினார்.. இந்த வருகையின்போது, 2 விதமான தாக்கங்களை காண முடிந்தது..

72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த 72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த

 பாயிண்ட் 1

பாயிண்ட் 1

முதலாவதாக, எடப்பாடி சிவகாசிக்கு வரப்போகிறார் என்று தெரிந்ததுமே ஓபிஎஸ் தரப்பில், அதற்கு எதிர்ப்பு காட்ட ரெடியாகிவிட்டார்கள்.. முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டு வந்துவிட்டனர்.. ஆனால், இந்த விஷயம் அறிந்த போலீசார், எடப்பாடி அந்த பகுதிக்கு வருவதற்கு முன்பேயே 34 பேரையும் கைது செய்து அழைத்து கொண்டு போனார்கள்.. எனினும், ஓபிஎஸ் எதிர்ப்பு என்பது தென்மண்டலத்தில் துவங்கி உள்ளதற்கான முதல் புள்ளியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

 பாயிண்ட் 2

பாயிண்ட் 2

இரண்டாவதாக, எடப்பாடி பழனிசாமி மிகவும் உற்சாகத்துடன் இன்று உரை நிகழ்த்தினார்.. முகமெல்லாம் சிரிப்பாக, பூரித்து போய் காணப்பட்டார்.. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, தென்மாவட்டத்தில், முதன்முதலாக, அதுவும் இந்த விருதுநகரில் காலடி வைத்திருக்கேன்... யாராக இருந்தாலும், இங்கே விருதுநகருக்கு வந்து இந்த எழுச்சியை பாருங்கள் என்று மார்தட்டி எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.. அதேசமயம், இது யாருக்கோ தரப்படும் மெசேஜாகவே உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

 பாயிண்ட் 3

பாயிண்ட் 3

இதற்கு முன்புவரை எடப்பாடி மாவட்டங்களுக்கு சென்று உரை நிகழ்த்தினால், திமுகவை விமர்சிப்பதுடன், மறக்காமல் ஓபிஎஸ்ஸையும் சேர்த்தே விமர்சிப்பார்.. அதிலும் கடந்த 3 மாதங்களாகவே, தடித்த வார்த்தைகளை ஓபிஎஸ் மீது எடப்பாடி பயன்படுத்தி வரும் நிலையில், இன்று அப்படி எதுவுமே தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை.. காரணம், ஓபிஎஸ்ஸை ஒரு பொருட்டாகவே எடப்பாடி கருதவில்லை என்றே தெரிகிறது.. அதனால், முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து விருதுநகரில் பேசினார்.

 பாயிண்ட் 4

பாயிண்ட் 4

அப்போது அவர் பேசியபோது, "எத்தனை சோதனைகள் வந்தாலும், சாதனையாக மாற்றுவேன்.. மீண்டும் அதிமுக ஆட்சி தான் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த கூட்டம் விளங்கிறது.. பொங்கல் தொகுப்பில்கூட ஊழல் செய்கிறது திமுக.. இந்தியாவுக்கே முதன்மை முதல்வர் அமைச்சராமே.. எவ்வளவு அநியாயம் இது.. அம்மா மினி கிளினிக்கில் திமுககாரனுக்கு என்னய்யா கஷ்டம்? முதல்வருக்குதான் அதில் என்ன கஷ்டம்? இந்த மினி கிளினிக்கூட பொறாமை.. அம்மா சிமெண்ட், அம்மா உணவகம் இதையும் மூட போறாங்க.. வேற பேர் வைக்க போறாங்களாம்.. எதிர்ப்பு வந்ததும், அதையும் கைவிட்டுட்டாங்க..

 பச்சரிசி + வண்டு

பச்சரிசி + வண்டு

இப்போது இருக்கின்ற நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் ஒரு கருத்தை சொல்கிறார்.. இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டீங்களே.. அதை எப்போது தருவீர்கள் என்று கேட்டால், "நாங்க சில்லறை மாத்திட்டு இருக்கோம்" என்கிறார்.. அப்படின்னா இவங்க இப்பத்தான் சில்லரையே மாத்த ஆரம்பிச்சிருக்காங்க.. எவ்வளவு நக்கலாக பேசறாங்க பாருங்க.. ஓட்டுப்போட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட வார்த்தையை சொல்றாங்க பாருங்க.. ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு தந்தாரே.. அந்த புளியில் பல்லி.. பச்சரிசியில் வண்டு.. அதைவிட கொடுமை, பொங்கலுக்கு தந்த வெல்லம் தெருவெல்லாம் ஒழுகிட்டே போகுது" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எடப்பாடி.

English summary
Do you notice the sudden change in Edappadi Palaniswami and slams DMK government in Sivakasi Meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X