கவுண்டமணியை "மாமா"னு அழைத்த அழகுமணியை நினைவிருக்கா! இப்ப எப்படியிருக்கார் தெரியுமா!
சென்னை: மகுடம் படத்தில் கவுண்டமணியின் காமெடியில் நடித்த அழகுமணியை உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கிறதா?
தென்னகத்தின் லாரல் ஹார்டி என அழைக்கப்படுபவர்கள் கவுண்டமணியும் செந்திலும். இவர்கள் இருவரின் காமெடிக்காகவே மொக்கை படங்கள் கூட ஹிட்டாகியுள்ளன. அந்த அளவுக்கு காமெடியில் கிங் இவர்கள் இருவரும்!

இவர்களின் காமெடிக்காகவே மக்கள் அந்த படங்களை திரும்ப திரும்ப பார்த்துள்ளனர். நாள் முழுக்க உழைத்துவிட்டு சினிமாவுக்கு வருவோர் வயிறு குலுங்க சிரிப்பது மட்டுமல்லாமல் நினைத்து நினைத்து சிரிப்பார்கள்.
ஆன் தி ஸ்பாட்டில் கூட இவருடைய காமெடியை எல்லாம் பார்ப்போர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார்கள். மன்னன் படத்தில் விஜயசாந்தியின் வீடு முன்பு போராட்டம் நடத்தும் போது கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினியே வாய் மீது கையை வைத்துக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார். லேசாக சிரித்து விடுவார். அது கதையுடனும் ஒன்றி போய்விடும்.

அது போல் நடிகர் கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் கவுண்டமணியுடன் நடித்தால் அந்த காமெடியில் பிரேமிலேயே இருக்க முடியாத அளவுக்கு காமெடி இருக்கும். இருவரும் சேர்ந்து பல நூறு படங்களில் நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கினர். இன்று எத்தனையோ காமெடியன்கள் வந்தாலும் கவுண்டமணி- செந்திலின் காமெடியை மட்டும் மறக்கவே முடியாது.
பல இயக்குநர்கள் ஹீரோ, ஹீரோயின்களை புக் செய்வதற்கு முன்பு கவுண்டமணி- செந்திலின் கால்ஷீட்டை வாங்கி விடுவார்கள். அது போல் ஹீரோக்களும் படத்தில் காமெடியன் யார் என கேட்டுவிட்டுதான் கால்ஷீட்டே கொடுப்பார்கள். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை வாங்கிக் கொள்வாராம்.

இவர்களது நகைச்சுவையும் மக்கள் மத்தியில் ஹிட்டடித்தது. நடிகர் சத்யராஜ் கவுண்டமணி ஆகிய இருவரும் பல படங்களில் கலக்கியிருப்பர். அப்படி இவர்கள் நடித்த படம் தான் மகுடம். இதில் ஒரு சில காமெடி காட்சிகள் காலம் கடந்தும் நம்மை ரசிக்க வைக்கும். அந்த காமெடி கேரக்டரை வைத்தே பலரை நாம் அழைப்பதும் உண்டு.
கவுண்டமணியிடம் செந்தில் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கச்சி அழகுமணி, உங்களுக்கு கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா என்பார். உடனே கவுண்டமணியும் சரி என்பார். அழகான பெண் தனக்கு மனைவியாக வருவதை எண்ணி கவுண்டமணி கனவில் துள்ளி குதிப்பார். திருமண மேடைக்கு வரும் வரை அழகுமணியை பார்க்காமல் அந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்போது மாப்ளே உங்கள் அழகுமணி வந்திருக்கு பாருங்க என சொன்னவுடன் போட்டோவை பார்த்தபடியே அந்த போட்டோவை விலக்கிவிட்டு பெண்ணை பார்ப்பார். அப்போது கவுண்டமணி அலறுவார். டேய் என்னடா தும்பிக்கை இல்லாத யானையை உட்கார வைத்திருக்கே என்பார். உடனே அந்த பெண் மாமா என கவுண்டமணியை அழைப்பார்.

அந்த காட்சியில் நடித்த அழகுமணியை நினைவிருக்கிறதா. மாமா என அழைத்த டயலாக் மூலம் பிரபலமடைந்துள்ளார். அவருக்கு இப்போது 49 வயதாகிறதாம். இவருடைய உண்மையான பெயரே அழகுமணிதானாம்.இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாராம். குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்பதால் ஆசிரியர் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்கிறாராம். இவருடைய புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள், கருப்பாக காட்டப்பட்ட அழகுமணி இத்தனை சிகப்பாக இருக்கிறாரே. பெயருக்கு ஏற்ப இவர் அழகுதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications