ஜூன் 4ல் யாருக்கு வாழ்த்து? லாரன்ஸை சைலன்ட்டாக்கிய கேள்வி.. யோசித்த பிறகு அவரே சொன்ன ‛நச்’ பதில்
சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ல் வருவதால் யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்கள்? என திடீரென்று கேட்கப்பட்ட கேள்வியால் சைலன்ட்டான ராகவா லாரன்ஸ் அதன்பிறகு கூறிய பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் டிராக்டர்கள் வழங்கி மனதை கவர்ந்தார்.

இந்நிலையில் தான் சென்னையில் இன்று ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதிலளித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛லோக்சபா தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ல் வருவதால் யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்கள்? ’’ என்ற கேள்வியை எழுப்பினார் இதனால் திகைத்துப்போன லாரன்ஸ் சில வினாடிகள் சைலன்டாக இருந்தார் அதன்பிறகு அவர் சிரித்தபடி நிதானமாக பதிலளித்தார்.
ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‛‛ஜெயிக்கிற எல்லோருக்கும் வாழ்த்துகள். ஜெயிக்கப்போகிற அனைவருக்கும் வாழ்த்துகள். தோல்வியடைந்தால் அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகள். அரசியல் ரீதியாக நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை ’’ என்று கூறி அரசியல் சார்ந்த சர்ச்சைகளில் சிக்காமல் நழுவினார்.
‛‛மாணவ-மாணவிகளுக்கு உதவி’’.. விஜயை போல் அரசியலுக்கு வருகிறாரா நடிகர் லாரன்ஸ்? கவனிக்க வைத்த பதில்
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா’’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகவா லாரன்ஸ், ‛‛எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ். இந்த சேவையானது கடவுளுக்கான சேவை.
இது அரசியலுக்கான நோக்கம் அல்ல. அரசியல் என நினைப்பவர்கள் போகப்போக புரிந்து கொள்வார்கள்’’ என பதிலளித்தது அரசியல் தொடர்பான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications