Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛மாணவ-மாணவிகளுக்கு உதவி’’.. விஜயை போல் அரசியலுக்கு வருகிறாரா நடிகர் லாரன்ஸ்? கவனிக்க வைத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு ராகவா லாரன்ஸ் கூறிய பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 592 மதிப்பெண்கள் எடுத்தார். ஏழ்மை குடும்த்தை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் கல்லூரியில் படிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் சீட் வாங்கி கொடுத்தார்.

When will you enter to politics Actor Raghavala Lawrence answer is here

அதோடு அவரின் படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்தை ராகவா லாரன்ஸ் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று வழங்கினார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் வர்ஷிணி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் டிராக்டர்கள் வழங்கி மனதை கவர்ந்தார். இந்நிலையில் தான் வர்ஷிணிக்கு உதவித்தொகை வழங்கிய பிறகு ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்னை பார்த்து பல்வேறு பட்ட மக்கள் உதவி செய்வார்கள் என்பதற்காக தான் நான் வீடு தேடி சென்று உதவிகளை செய்து வருகிறேன் அதில் எனக்கு ஒரு சந்தோஷம் உள்ளது. கிராமங்களுக்கு சென்றால் என்னிடம் ஏகப்பட்ட மனுக்கள் தருகின்றனர். அதை படிக்க படிக்க அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. என்னால் முடிந்த அளவில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன். யாரிடமும் பணம் வாங்காமல் எனது சொந்த செலவில் செய்து வருகிறேன்'' என்றார்.

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகவா லாரன்ஸ், ‛‛எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ். இந்த சேவையானது கடவுளுக்கான சேவை. இது அரசியலுக்கான நோக்கம் அல்ல. அரசியல் என நினைப்பவர்கள் போகப்போக புரிந்து கொள்வார்கள்'' என்றார்.

இதன்மூலம் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவிகளை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக நடிகர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பாராட்டு விழா நடத்தினார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் தான் ராகவா லாரன்சும் விஜய் பாணியில் அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இந்த பேட்டியின் மூலம் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+