புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை.. ஷாக்கில் புள்ளிங்கோஸ்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரினா கடற்கரையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 2023 ஆம் ஆண்டு முடிவடைகிறது. நள்ளிரவு 12 மணி முதல் 2024 தொடங்குகிறது. இதை ஆட்டம் , பாட்ட்ம, கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகிவிட்டனர். புத்தாண்டை எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அதன் படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்து வருகிறார்கள். சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 18 ஆயிரம் போலீஸார் முக்கிய சாலைகளில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் இருப்பார்கள்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீஸார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் 31 ஆம் தேதி அன்று இரவு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க கைகளில் அடையாள வளையம் (tag) கட்டிவிடப்படுகிறது.
இதில் பெற்றோர்களின் செல்போன் எண், போலீஸாரின் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் காணாமல் போகும் குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். சென்னை மாநகரில் 400 இடங்களில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபடுகிறார்கள். ஈசிஆர் சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸார் ரேஸை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மது போதையில் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.
தனியார் நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குளங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் இளைஞர்கள் பைக், கார் ரேஸ்களில் ஈடுபடக் கூடாது. இரவு 8 மணி முதல் மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications