கடல் அலை தெரியும்.. அதனுடைய ஆழம் தெரியுமா? செந்தில் பாலாஜி வழக்கு.. கபில் சிபல் சொன்ன வினோத பாயிண்ட்
சென்னை: அமலாக்கத்துறை வெறுமனே கடலை மட்டும் பார்க்க கூடாது. கடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆனால் இவர் கடலை மட்டும் பார்த்துவிட்டு உள்ளே எதோ இருப்பதாக நினைத்துக்கொண்டு கைது செய்கிறார்கள், என்று கபில் சிபல் இன்று செந்தில் பாலாஜி வழக்கில் வாதம் வைத்தார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்து உள்ளது.

இன்று செந்தில் பாலாஜி சார்பாக வழக்கறிஞர் கபில் சிபல் இன்று வாதம் வைத்தார். அவர் தனது வாதத்தில், எனக்கு இன்றுதான் ஒரு மருத்துவ சிகிச்சை முடிந்தது. இருந்தாலும் நான் இன்று வாதம் செய்கிறேன். சொலிஸ்டர் ஜெனரல் வைத்த சில வாதங்களை பார்த்த போது மிகவும் வியப்பாக இருந்தது. அமலாக்கத்துறை என்பது போலீஸ் கிடையாது. அவர்களுக்கு போலீசுக்கான என்ற அதிகாரமும் கிடையாது. பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அமைப்பானது வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிகளை கையாளும் தரகர்களிடம் ஒருவரிடம் விசாரிக்க முடியும்.
அவர்களிடம் ஆதாரங்களை வாங்க முடியும் அந்த ஆதாரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டவுடன், அதை வைத்து புகாரைப் பதிவு செய்ய முடியும். இதை நான் சொல்லவில்லை, உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இந்த புகாரை பதிவு செய்து கைது செய்த பின் புதிதாக ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது.
புதிய ஆதாரங்களை சேர்க்க முடியாது. சட்ட பிரிவு 50ன் கீழ் அமலாக்கத்துறை ஒருவர் மீது சந்தேகம் இருந்தால் அவரை விசாரிக்கலாம். அவருக்கு எதிராக புலன் விசாரணை செய்யலாம். அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டலாம். அவரை கைது செய்யலாம். ஆனால் அதன்பின் ஆதாரங்களை திரட்ட நினைக்க கூடாது.
முழுமையாக ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, ஒருவர் குற்றம் செய்தவராக கருதப்பட்டால் மட்டுமே அவரை கைது செய்ய முடியும். ஏனென்றால் இவர்கள் போலீஸ் கிடையாது. போலீஸ் ஒருவரை கைது செய்து, சந்தேகத்தின் பெயரில் அவரை விசாரிக்கலாம்.
ஆனால் அமலாக்கத்துறை அப்படி செய்ய முடியாது. போலீஸ் பவர் இருக்கும் என்றால் அமலாக்கத்துறை ஏன் இருக்க வேண்டும். போலீஸ் இருந்தாலே போதும். அமலாக்கத்துறைக்கு இருக்கும் போலீஸ் இருக்கும் ஒரே அதிகாரம் அவர்களால் கைது செய்யப்பட்டவரை கோர்டில் ஆஜர் படுத்த முடியும்.
அதுவும் கூட 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபரை அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை புலன் விசாரணை மட்டுமே செய்யலாம். கைது செய்த பின் ஒருவரை விசாரிக்க முடியாது. இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
நான் தவறு செய்தேன் என்று அவர்கள் கருதினால் கூட எனக்கு எதிராக ஆதாரம் இல்லாமல்.. ஆவணமாக ஆதாரம் இல்லாமல் அவர்களால் என்னை கைது செய்யவே முடியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படித்தான் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவரிடமே கூட சொல்லவில்லை.
அமலாக்கத்துறை சட்டத்திற்கு கீழ் மட்டுமே நடவடிக்கைகளை எடுக்க முடியும். கைதுக்கு முன் என்ன ஆதாரங்கள் சிக்குகிறதோ அதை வைத்தே கைது செய்ய முடியும். கைதுக்கு பின் புதிதாக ஆதாரங்களை சேர்க்க முடியாது. புதிதாக விசாரணைகளை பதிவு செய்ய முடியும்.
ஒருவர் கைது செய்யப்பட வேண்டும் என்றால் அவருக்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை கொண்டிருக்க வேண்டும். அமலாக்கத்துறை வெறுமனே கடலை மட்டும் பார்க்க கூடாது. கடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆனால் இவர் கடலை மட்டும் பார்த்துவிட்டு உள்ளே எதோ இருப்பதாக நினைத்துக்கொண்டு












Click it and Unblock the Notifications