சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரிடம் "குட்மார்க்".. மக்களுக்கு நெருக்கமான ஐஏஎஸ்.. ஆல்பி ஜானை களமிறக்கிய தமிழ்நாடு அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியரின் நியமனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    Who is Alby John Varghese IAS? | மக்கள் முதல் CM மனசு வரை கவர்ந்தவர் | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகிறார்கள். நேற்று தமிழ்நாட்டில் 54 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்புஉடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு

    இவர்களுக்கு பதிலாக 24 மாவட்டங்களில் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்றும் தமிழகத்தில் ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    நியமனம்

    நியமனம்

    ஒரு பேரிடர் காலத்தில் ஆட்சியரை மாற்றுவது என்பது மிக முக்கியமான முடிவு. அதுவும் கொரோனா அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஆட்சியை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. புதிதாக ஒரு ஆட்சியர் வருகிறார் என்றால், அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக செயல்படுவது பெரிய சவால். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு இளமையான ஐஏஎஸ் அதிகாரிகள், நல்ல டிராக் ரெக்கார்ட் கொண்ட அதிகாரிகளை தேடிப்பிடித்து ஆட்சியராக நியமித்து வருகிறது.

    ஸ்டிரிக்ட்

    ஸ்டிரிக்ட்


    ஸ்டிரிக்ட் அதிகாரி என்று பெயர் எடுத்த, துடிப்பான இளம் ஐஏஎஸ்அதிகாரிகளை தமிழ்நாடு அரசு ஆட்சியர்களாக நியமித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியரின் நியமனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆட்சியர் ஆல்பி

    ஆட்சியர் ஆல்பி

    திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா மாற்றப்பட்டு ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூரில் சென்னைக்கு இணையாக கேஸ்கள் பதிவாகும் நிலையில் மிக முக்கியமான கட்டத்தில் ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் திருவள்ளூரில் சில சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ள நிலையில் இவரின் பொறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவர் ஐஏஎஸ் ஆகும் முன் மருத்துவம் படித்தவர்.

     மருத்துவம்

    மருத்துவம்

    திருச்சூரில் மருத்துவம் படித்துவிட்டு, அதன்பின் யுபிஎஸ்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். இந்திய அளவில் தேர்வு எழுதியவர்களில் ரேங்க் 4 எடுத்து அசத்தினார். நேராக தமிழ்நாட்டில் போஸ்டிங் பெற்றவர், 2015ல் தேவக்கோட்டை துணை ஆட்சியர், 2018ல் தூத்துக்குடி ஆணையர், அதன்பின் 2020 சென்னை சுகாதார இணை இயக்குனர் பொறுப்புகளை கவனித்து வந்தார்.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் சென்னை சுகாதார இணை இயக்குனராக அல்பி ஜான் செய்த பணிகள் பெரிய வரவேற்பை பெற்றன. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் கொரோனா பரவலை 7000ல் இருந்து 1000க்கும் கீழ் கொண்டு செல்வதில் இவரின் பங்கு முக்கியமாக இருந்தது.

    அனுபவம்

    அனுபவம்

    மருத்துவர் என்பதாலும், சுகாதார துறையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பவர் என்பதாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அதோடு சமூக வலைத்தளங்களில் மக்களின் கோரிக்கைக்கு உடனே பதில் அளிப்பது. சமூக வலைத்தளம் ,மூலம் சென்னை மக்களோடு தொடர்பில் இருப்பது, தடுப்பு பணிகளை கண்காணிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாக ஆல்பி ஜான் வர்கீஸ் இருந்தார்.

    கவனம்

    கவனம்

    முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஆல்பி ஜான் வர்கீஸ் ஈர்த்த நிலையில், அரசின் குட்மார்க்கை மட்டுமின்றி மக்களின் குட்மார்க்கையும் பெற்று இருக்கிறார். இதையடுத்து இதுவரை ஆட்சியர் பொறுப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது திருவள்ளூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இவர் ஆற்றிய பணிகள் கவனம் பெற்ற நிலையில், தற்போது ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Doctor, Medical expert, People man: IAS Alby John appointed as the Thiruvallur collector by Tamilnadu government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X