கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்?
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு திடீரென தனது சிகிச்சை அளிக்கும் பணியிலிருந்து விலகியுள்ளார். சித்த மருத்துவம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் இவர்.
கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது.
இதனால் தமிழக அரசும் சித்த மருத்துவர் வீரபாபுவை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கொடுத்தது.

பொறியியல்
இதையடுத்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க சாலிகிராமத்தில் இவருக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் தனி சித்த மருத்துவ மையத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது. இந்த மையத்தில் இதுவரை உயிரிழப்பே இல்லாமல் இருந்து வந்தது.

கொரோனாவை விரட்டும் சித்தா
பெரும்பாலான கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்கவே விரும்பினர். இதனால் அந்த மையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த மையத்திலிருந்து இதுவரை 5400 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகள் இருந்தாலும் அவர்களுக்கு டாக்டர் வீரபாபு சிறப்பான சிகிச்சை அளித்து கொரோனாவை விரட்டுவதாக கூறப்பட்டது.

ரஜினிகாந்த்
இவரது சிகிச்சை முறைகளை ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தார்கள். இந்த நிலையில் மருத்துவம் அளிக்கும் பணியிலிருந்து சித்த மருத்துவர் வீரபாபு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்த பின்னர் நான் பணியிலிருந்து விலகிவிடுவேன் என வீரபாபு கூறியுள்ளார்.

மருத்துவமனை
இந்த நிலையில் இவரது விலகலால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீரபாபு விலகிய பின்னர் அண்ணா சித்த மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு சாலிகிராமம் சித்த மருத்துவ மையம் செயல்படும் என கூறப்படுகிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications