சென்னை மக்களே உஷார்.. கொஞ்சம் விட்டா கண்ணே போயிடும்! 'டிரை ஐஸ் பிரச்னை'.. மருத்துவர்கள் வார்னிங்
சென்னை: காற்று மாசு, கால நிலை மாற்றம் போன்ற காரணங்களால் சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் 'உலர் விழி' (Dry Eyes) பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் நகரமயமாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இதனை இன்னும் வேகமெடுக்க செய்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அபரிமிதமாக அதிகரிக்கிறது. வாழ்வாதாரத்திற்காக, உயிர் வாழ்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த புலம் பெயர்தல், அம்மக்களை பல நேரங்களில் கடும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகிறது.

இப்படி நகர்ப்புறத்தில் வந்து வேலை செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உடல் பருமன், தூக்கமின்மை, மன சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதில் மற்றொரு முக்கியமான பிரச்னை 'உலர் விழி' பாதிப்பு. அதாவது கண்களுக்கு வரும் ஈரப்பதம் போதிய அளவு வராமல் இருப்பதுதான் இந்த உலர் விழி பிரச்னையாகும். தொடக்கத்தில் கண் எரிச்சல், கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இருப்பினும் முறையான ட்ரீட்மென்ட் எடுக்காவிடில் இது கண் பார்வையை பாதித்துவிடும்.
மனித உடலில் கண்களுக்கு மட்டும்தான் தனியான நோய் எதிர்ப்பு திறன் இருக்கிறது. கண்களில் ஏதேனும் சின்ன சின்ன பிரச்னை எனில் அதை இந்த நோய் எதிர்ப்பு திறனே சமாளித்துவிடும். ஆனால் இந்த திறன் பாதிப்புக்கு உள்ளாகும் போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் கண்களை பாதிக்க தொடங்கிவிடும். இதற்கு உலர் விழி பிரச்னையும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா ராஜகோபாலன் கூறுகையில், "தற்போது சென்னையில் சுமார் 30 சதவிகிதம் பேருக்கு இந்த உலர் விழி பிரச்னை இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த பாதிப்பு சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருந்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீர்தான். ஆனால், உலர் விழி பிரச்சினையுடையவர்களுக்கு சரியாக கண்ணீர் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும் தன்மை ஆகியவை ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக ஒளிவிலகல் குறைபாடு உடையவர்கள், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தன்னுடல் தாக்கு நோய் (ஆட்டோ இம்யூன்), முடக்குவாத பாதிப்புள்ளவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. இத தவிர லேப்டாப்/கம்ப்யூட்டர்/செல்போன் போன்ற மின்னணு திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடிகள் பார்க்க வேண்டும். இது டிஜிட்டல் டிஸ்பிளேவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்" என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications