"பயந்துட்டீங்களா".. எடப்பாடியை சைஸாக "குத்திய" அப்பாவு.. நொறுங்கிய அமித்ஷாவின் "ஹிந்தி" பாலிட்டிக்ஸ்

இந்தி திணிப்புக்கு எதிரான தனித்தீர்மானத்தை தமிழக அரசு இன்று கொண்டுவருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாததால் அதிமுகவினர் திட்டமிட்டு கலகம் செய்கின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டினார்.

இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய பாஜக அவ்வப்போது செய்து வருவது வழக்கம்.. அதிலும் தேர்தல் வரும் சமயங்களில் பாஜக கையில் எடுக்கும் ஆயுதம் ஒன்று இந்தி திணிப்பு மற்றொன்று, மதரீதியான நடவடிக்கைகள் ஆகும்..

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் ஹிந்தியை கையில் எடுத்துள்ளார் அமித்ஷா.. ஹிந்தி திவாஸ் தினத்தையொட்டி அன்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா ஒரு விஷயத்தை பேசியிருந்தார்.

அமித்ஷா

அமித்ஷா

"நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.. இதற்கு அப்போதே திமுக கொந்தளித்தது.. "இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம்" என்று காட்டமாக கூறினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ஆப்ஷனல்

ஆப்ஷனல்

இப்படிப்பட்ட சூழலில்தான், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும், ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விவகாரம் கிளப்பப்பட்டுள்ளது. ஐஐடி கல்வி நிறுவனங்கள் முதல் மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும்.

 ஃபேக்ஸ்கள்

ஃபேக்ஸ்கள்

தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம், காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே அமித்ஷா தலைமையிலான குழுவின் பரிந்துரையாக உள்ளது. அதுமட்டுமல்ல, மத்திய அரசின் அலுவலகங்கள் எல்லாவற்றிலுமே கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மெயில்கள் போன்றவையும் ஹிந்தியில்தான் இருக்க வேண்டுமாம்.. இதற்குதான் தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பை காட்டி உள்ளது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது

 டபுள் டவுட்

டபுள் டவுட்

அதன்படியே, இந்த தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து உரையாற்றினார்.. பிறகு, முதல்வரின் இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சித் தலைவர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.. அதற்கு பிறகு கடைசியாக, இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டும் விட்டது.. பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.. கிட்டத்தட்ட பாஜகவுக்கு வைக்கப்படும் பலமான செக்காகவே இது பார்க்கப்படுகிறது.. ஆனால், இதற்கு அதிமுக ஆதரவு தருமா என்பது சந்தேகமாக உள்ளது.. கூட்டணியில் பாஜகவுக்கு, இந்த மொழி விஷயத்தில் கட்டுப்படுமா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது..

 ராமதாஸ் டென்ஷன்

ராமதாஸ் டென்ஷன்

இதே கூட்டணியில்தான் பாமக உள்ளது என்றாலும், எப்போதெல்லாம் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு எழுகிறதோ, எப்போதெல்லாம் தமிழுக்கு இழுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் டாக்டர் ராமதாஸ் டென்ஷனாகிவிடுகிறார்.. கடுமையாக மத்திய அரசை கண்டித்து அறிக்கை விடுவார்.. ஆனால், அதிமுக அப்படி இல்லை.. ஏகப்பட்ட விவகாரங்களில் சிக்கி கொண்டுள்ள நிலையில், இந்த தனித்தீர்மானத்துக்கு ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பதிலாக, தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்ற விவகாரத்தையும், கிளப்பி விட்டுள்ளது.. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஓபிஎஸ்ஸுக்கு நேற்றைய தினமே ஒதுக்கியிருந்தார் அப்பாவு..

 நோ.. நோ

நோ.. நோ

ஆனால், இன்றைய தினம், சபை கூடுவதற்கு முன்பேயே, இதே பிரச்சனையை எடப்பாடி & டீம் நேரடியாகவே அப்பாவுவிடம் எழுப்பியது.. சட்டசபையிலும் அவையை நடத்த விடாமல், பிரச்சனை கிளப்பியது.. அவையை ஒழுங்காக நடத்தவிடும்படியும், மக்கள் பிரச்சனையை பேச விடுங்கள் என்று அப்பாவு சொல்லி கொண்டே இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி விடவில்லை. அவைக்கு நடுவே வந்து, ஆவேசமாக சீறினார்.. இதனால் அப்பாவு, "ஹிந்தி திணிப்பு எதிரான தீர்மானத்தை தெரிந்து கொண்டு யாருக்கோ கட்டுப்பட்டு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என செயல்படுகிறீர்கள்" என்று வெளிப்படையாகவே சாடினார்.

 ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்

ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்

சட்டசபையில் இன்றைய தினம் 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதால் அச்சத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும், இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாததால் அதிமுகவினர் திட்டமிட்டு கலகம் செய்கின்றனர் என்றும் அப்பாவு குற்றம்சாட்டினார்.. எனினும் சபாநாயகர் கண்டித்ததைகூட பொருட்படுத்தாமல், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.. இந்த மொத்த நிகழ்வுகளையும் பாஜக உன்னிப்பாகவே கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+