15 நாட்களுக்கு முன்பே தெரியுமா? ‘டபுள் ஸ்டாண்ட்’ மலை? காயத்ரிக்கு சஸ்பெண்ட்! சூர்யாவுக்கு சப்போர்ட்?
சென்னை : பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா மீது, டெய்சி சரண் 15 நாட்களுக்கு முன்பே மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் முறையிட்டதாகவும், இதுதொடர்பாக இருவரையும் அழைத்து அவர் அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயம் அதோடு முடிந்துவிடும் என அண்ணாமலை கருதிய நிலையில், அந்த ஆடியோ பொதுவெளியில் லீக்காகி, பாஜகவை திணறடித்தது. இதையடுத்தே, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை என்கிறார்கள்.
15 நாட்களுக்கு முன்பே இந்த போன் மிரட்டல் விவகாரம் அண்ணாமலைக்குத் தெரியவந்தபோதும், நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆடியோ இன்று காலை என் கவனத்துக்கு வந்தது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாக பேசிய சூர்யாவுக்கு அதிக தண்டனை வழங்காமல், அதைப் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்தது தொடர்பாகவும் பாஜகவுக்குள்ளேயே சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆபாச ஆடியோ
தமிழக பாஜக ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான கடுமையான வார்த்தை மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெய்சி சரண், தனக்கு கீழே உருவாக்கும் கமிட்டியில் நிர்வாகிகளை நியமனம் செய்ததற்கு எதிராக டெய்சி சரணிடம் திருச்சி சூர்யா கோபமாக மிகக் கடுமையான ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதாக அந்த ஆடியோ அமைந்திருந்தது.

கொலை மிரட்டல்
அந்த போன் உரையாடலில், வார்த்தைக்கு வார்த்தை கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தி டெய்சி சரணை திட்டியுள்ள திருச்சி சூர்யா, "ஓ.பி.சி அணியில் 68 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். என் சாதிக்காரர்களை ஏவி விட்டால் நீ ஊருக்கே கிளம்ப முடியாது. ஒரு மாதம் தான். நீ சென்னையில் வாழவே முடியாது. ஜனவரி பிறப்பதற்குள் தீர்த்துக் கட்டி விடுவேன், அண்ணாமலை, மோடி, அமித்ஷா, நட்டா என யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்" என்கிற ரீதியில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் திருச்சி சூர்யா.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
இந்த ஆடியோ தொடர்பாக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் விமர்சித்தார். பெண்களைக் குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என பாஜக மாநில தலைவர் உறுதியளித்துள்ளார். அப்படி இருக்கும்போது சொந்த கட்சிப் பெண்களை ஏன் குறிவைத்து தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என விமர்சித்திருந்தார்.

6 மாதம் சஸ்பெண்ட்
ஆடியோ பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜ.கவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். மேலும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாபதி அறிக்கை தரவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார்.

குறைந்த தண்டனை
பாஜக பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசிய திருச்சி சூர்யா 7 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள அண்ணாமலை, இந்த விவகாரம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராமை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு மோதல்கள் காரணமாக காயத்ரி ரகுராம் மீது கோபத்தில் இருந்த அண்ணாமலை இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அவரை பழிவாங்கி விட்டார் எனக் குமுறுகிறார்கள் காயத்ரியின் ஆதரவாளர்கள்.

காயத்ரி - அண்ணாமலை மோதல்
காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைமை மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தன்னைக் கேலி செய்தோ, விமர்சித்தோ எழுதப்படும் ட்வீட்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் லைக் செய்தது தொடர்பாக இந்த மோதல் ஆரம்பித்தது. பாஜக அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் செல்வக்குமார் என்பவரின் ஆதரவாளர்கள் தன்னைக் குறிவைத்து தாக்கி வருவதாக சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியிருந்தார் காயத்ரி.

ஃபெஃப்சி சிவா விவகாரம்
ஏற்கனவே, கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்தபோது, ஃபெஃப்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் தனக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார் காயத்ரி ரகுராம். அவர்களை பொறுப்பில் இருந்து நீக்குவதாக காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட, காயத்ரிக்கு அந்த அதிகாரம் இல்லை என அண்ணாமலை தரப்பு அறிவித்தது. பெப்சி சிவா உள்ளிட்டோர் மீது மாநிலத் தலைவர் அண்ணாமலை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அண்ணாமலை மீது அப்செட்டில் இருந்து வந்தார் காயத்ரி ரகுராம்.

அண்ணாமலைக்கு நெருக்கம்
இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு, தன்னை அழைக்கவில்லை என்பதாலும் காயத்ரி ரகுராம் அப்செட்டில் இருந்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே தனது குமுறல்களை ட்விட்டரில் வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தான் திருச்சி சூர்யா- டெய்சி சரண் ஆடியோவையும் பகிர்ந்து அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க முயன்றார். திருச்சி சூர்யா, அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்பதாலேயே காயத்ரி ரகுராம் இதனை கையில் எடுத்து விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

15 நாட்களுக்கு முன்பே
திருச்சி சிவா போனில் பேசியது தொடர்பாக பாஜகவின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் 15 நாட்களுக்கு முன்பே முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்ணாமலை இரு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளார். மேலும், இருவரிடமும், எந்த பிரச்சனையும் வேண்டாம், இனி இருவரும் அவரவர் விஷயங்களில் தலையிட்டுக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், டெய்சியிடம், சூர்யா மீது நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை தான்?
இந்நிலையில் தான் நேற்று இந்த ஆடியோ பொதுவெளியிலும் பரவியது. 15 நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ விவகாரம் அண்ணாமலைக்குத் தெரியவந்தபோதும், நேற்று அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆடியோ இன்று காலை என் கவனத்துக்கு வந்தது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதும், ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, அதுவரை திருச்சி சூர்யா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications