"ஹிட் லிஸ்ட்".. பஞ்சு பஞ்சா போச்சே.. இதான் விஷயமா.. ஒரு நிமிஷம் அதிமுக கூட ஆடிப்போச்சு.. அதான் பாஜக
எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனின் பாணியை கடைப்பிடிக்கிறார் என்கிறார்கள்
சென்னை: பாஜகவை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டார் என்ற பேச்சுக்கள் வட்டமடிக்கும் நிலையில், இன்னொரு யூகம் கிளம்பி உள்ளது.. சொல்லி வைத்ததுபோலவே, எடப்பாடி ஒரு ஷாக்கையும், தினகரன் இன்னொரு ஷாக்கையும் டெல்லிக்கு தந்திருக்கிறார்கள்.. இதுக்கு காரணம் என்னவா இருக்கும்?
நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.
மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

குஷி சந்தோஷம்
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. சிவி சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி போலவே ஏகப்பட்டோர் பாஜக எதிர்ப்பாளர்களாகவும் இருந்து வரும்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், இந்த முறை ஆட்சியை இழந்தோம் என்ற மனோபாவத்துடன் இவர்கள் உள்ளதால், எடப்பாடியின் நேற்றைய தின பேச்சை இவர்கள் ரசித்து வருகிறார்களாம்.

தாட்சண்யம்
இது ஒருபக்கம் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சந்திப்பு குறித்து ஏன் அப்படி சொன்னார்? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.. எடப்பாடியை பொறுத்தவரை பாஜக இல்லாமல் தனித்து அரசியல் செய்ய முடியாது என்றும், கட்சிக்காக இல்லாவிட்டாலும், பல்வேறு நெருக்கடிகளில் இருந்து தன்னை காத்து கொள்ள அல்லது புதிதாக எந்த நெருக்கடிகளும் வந்துவிடாமல் இருக்கவாவது, பாஜகவின் தயவு, எடப்பாடிக்கு என்னைக்கும் தேவையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 95 சதவீத அதிமுக நிர்வாகிகள் பலத்தை பெற்றுள்ள எடப்பாடியின் தயவு பாஜகவுக்கு தேவை என்றாலும், பாஜகவை விட்டு எடப்பாடியால் கட்சி நடத்த முடியாது என்கிறார்கள்.

ரூட் மாறுதோ
அப்படியானால், எடப்பாடி ஏன் அப்படி பேசினார்? என்ற கேள்வி எழுகிறது.. டிடிவி தினகரனிடம் கடந்த 4 நாட்களாக ஒரு மாறுதல் தென்பட்டு வருகிறது.. அமமுக இணையதள வெளியீட்டு விழாவில் தினகரன் பேசும்போது, "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு... சனாதனம் குறித்தெல்லாம் ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை.. வேறு வேலையில்லாமல் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.. அவர் பேசுவதை அவர் வீட்டில் உள்ளவர்களே கேட்கமாட்டார்கள்.. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படிதான் பேசுவார்களா என்பது எனக்கு தெரியவில்லை" என்றார் தினகரன்.

கிளைமேட்
கடந்த வாரம் முன்பு வரை, பாஜகவுடன் கூட்டணியே முடிவாகிவிட்டதாகவும், அதிமுக கூட்டணிக்குள் இருக்கிறதோ இல்லையோ, அமமுக நிச்சயம் சேர்ந்துவிடும் என்ற பேச்சு வலுவாக ஒலித்து கொண்டிருந்தது.. அதற்கேற்றார்போல், தினகரனும் பாஜக ஆதரவாளராகவே உருமாறி பேசிக் கொண்டிருந்தார்.. ஆனால், திடீரென பட்டும், படாமலும் தினகரன் பேசியது, களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை.. டிடிவி தினகரனின் அதே ரூட்டைதான் இப்போது எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

கறார் கணக்கு
அதாவது, பாஜக உடன் கூட்டணி என்று வெளிப்படையாக இப்போதே தெரிந்துவிட்டால், இது தமிழக களத்தில் வேறு வகையாக எதிரொலித்துவிடுமோ? இப்போதே பாஜக பக்கம் சாய்ந்துவிட்டால், கறாராக சீட் எண்ணிக்கையை கேட்டு வாங்க முடியாதோ? என்று நினைத்துதான், இவர்கள் தனித்தனியாக முடிவுசெய்து இவ்வாறு பேசியிருக்கலாம் என்கிறார்கள்.. இதுவரை சிறுபான்மையினருடன் கூட்டணி வைத்தே தினகரன் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்றால், அச்சமூகத்தினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற கலக்கமும் சூழ்ந்திருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பிரம்மாஸ்திரம்
ஆனால், இந்த கலக்கம், பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து வரும் அதிமுக இருந்து வரும்நிலையில், தற்சமயம் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றே யூகிக்கப்படுகிறது.. ஆனால், பெரும்பாலானோர் எடப்பாடி, பாஜக எதிர்ப்பு நடவடிக்கையை எடுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.. இதில் எது உண்மை என்று இனிதான் தெரியவரும்.. ஆனால், எப்படி பார்த்தாலும், தினகரனுக்கும் சரி, எடப்பாடிக்கும் சரி, வழக்குகளின் நெருக்கடி என்பது அதிகமாகவே உள்ளது.. அந்தவகையில், இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பிரச்சனை, வைக்காவிட்டாலும் பிரச்சனை.. என்னதான் நடக்க போகிறது என தெரியவில்லை.. பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications