"வெட்ட வெளிச்சம்".. பாஜக நிர்வாகியை திட்ட போய்.. "அந்த" விஷயத்தை உளறிய காயத்ரி.. சட்டென வளைத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த கட்சி நிர்வாகியை திட்டுகிறேன் என்ற பெயரில் பாஜகவில் இருப்பதாக கூறப்படும் முக்கியமான விஷயம் ஒன்றை பற்றி உளறி இருக்கிறார் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம். இதை தற்போது திமுகவினர் கெட்டியாக பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள்.. அப்படித்தான் தற்போது பாஜகவில் நடக்கும் மோதலை திமுக சார்பு நெட்டிசன்கள் பாப் கார்ன் வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவில் நடக்கும் இந்த சிவில் யுத்தத்தை தொடங்கி வைத்தது காயத்ரி ரகுராம். கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள், மூத்த நிர்வாகிகளை அவமதிக்கிறார்கள் என்று புகார் வைத்து இருக்கிறார் காயத்ரி.

அதோடு கட்சியில் இத்தனை வருடமாக இருந்தும், ஒரு பெண்ணாக இருந்தும் எனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பாஜகவினர் சிலர் மோசமாக போஸ்ட் செய்கிறார்கள். பாஜகவை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் காசு கொடுத்து எனக்கு எதிராக ட்விட் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் காயத்ரி.

என்ன மோதல்?

என்ன மோதல்?

காசியில் நடந்த காசி தமிழ் சங்கம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்குதான் மோதல் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பாஜக தலைகள் சென்ற நிலையில், இவருக்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை அனுமதிக்காததுதான் காயத்ரி ரகுராம் கோபம் கொள்ள காரணம். இதையடுத்து கட்சியில் தனக்கு மதிப்பு இல்லை. மூத்தவர்களை மதிப்பது இல்லை. monopoly தவறானது என்றெல்லாம் கோபமாக பல்வேறு ட்விட்களை காயத்ரி போட்டு வந்தார். அவர் எங்கும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை குறிப்பிடவில்லை. ஆனால் அவர் மறைமுகமாக அண்ணாமலையை குறிப்பிட்டதாக புகார் வைக்கப்பட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

இதையடுத்துதான் பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு சென்றது. பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்தது. அதில், அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லனா மானாடமயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ளார். அதாவது அண்ணாமலை சொல்வதை கேளு என்பது போல விமர்சனம் செய்து உள்ளனர். இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார். இதை காயத்ரி எதிர்த்து போஸ்ட் செய்த போதுதான் முக்கியமான விஷயம் ஒன்றை உளறி இருக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அதில், செல்வகுமார் ஆட்கள் எனக்கு எதிராக போஸ்ட் செய்து வருகின்றன. நீங்கள் என்னை ட்ரோல் செய்வதர்கள் காசு பெறவில்லை. போய் "அந்த" ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் போல 4000+ லைக்குகளை போடுங்கள் என்று கூறியுள்ளார். அதாவது, எனக்கு எதிராக போஸ்ட் போடுவதற்கு உங்களுக்கு காசு கொடுக்கப்படவில்லை. எப்போது ஒரு வாலில் (ஒருவருடைய ட்விட்டர் பக்கத்தில்) போய் 4000 சொச்சம் லைக்ஸ் போடுவீர்களே.. அங்கே போய் லைக்ஸ் போடும் வேலையை பாருங்கள் என்று கூறி உள்ளார். இதைத்தான் காசு வாங்கிக்கொண்டு எப்போதும் போல அண்ணாமலைக்கு லைக் போடுங்கள் என்று இவர் மறைமுகமாக விமர்சனம் செய்ததாக நெட்டிசன்கள் இதை பற்றி விளக்கி உள்ளனர்.

 அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை தனக்காக தனியே ஐடி விங் ஒன்றை வைத்து, தன்னை மட்டும் பிரபலப்படுத்தி வருவதாக ஒரு புகார் உள்ளது. திமுகவினர், சிலர் பாஜகவினர் இந்த புகாரை வைத்து வரும் நிலையில்தான் காயத்ரி ரகுராம் இப்படி பெயர் சொல்லாமல்.. அந்த வாலில் போய் லைக்ஸ் போடுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து அண்ணாமலை டிபி வைத்த நெட்டிசன்கள் பலர் காயத்ரியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் சேர்ந்து காயத்ரியை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

திமுக

திமுக

இன்னொரு பக்கம் திமுகவினர் இதை வைத்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக சமூக ஊடக அணி பணம் கொடுத்துதான் RT, Like வாங்குகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார் அந்த கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம். எனவே அண்ணாமலை & co வாங்குற லைக்ஸ் எல்லாம் டீம் போட்டு காசு கொடுத்து bots வச்சி வாங்குற லைக்ஸ் . இது முன்னமே எங்களுக்கு தெரிஞ்சாலும் பாஜகவிலிருந்து ஒருவர் சொல்லும்போது அது இன்னும் வீரியமாகும் இந்த உண்மையை உரக்கச் சொன்ன காய்த்ரிக்கு வாழ்த்துகள், என்று திமுகவினர் குறிப்பிட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+