"சீனில்" வந்த ஜான் பாண்டியன்.. என்ன பட்டென இப்படி சொல்லிட்டாரே.. கடுப்பான ஓபிஎஸ் டீம்.. என்னாச்சு?
அதிமுக விவகாரம் குறித்து ஜான் பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஜான் பாண்டியன் 2 விஷயங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதலை தந்துள்ளது.
Recommended Video
அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது..
இதனால், ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் இணைந்து செயல்படுவது கடினம் என்றே தெரிகிறது.. ஆனால், எடப்பாடி இல்லாமல், ஓபிஎஸ்ஸால், அவ்வளவு பெரிய கட்சியை நடத்தவும் முடியாது என்கிறார்கள்.

எடப்பாடி டீம்
அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது..

ஜான் பாண்டியன்
நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை மட்டுமே எடப்பாடி பெரிதும் நம்பி உள்ள சூழலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆறுதல் வலையை வீசி நம்பிக்கையையும் எடப்பாடி தரப்புக்கு ஏற்படுத்தி உள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில், கூட்டணியில் இருந்தவர் என்றாலும், எடப்பாடி மீது தனிப்பட்ட மரியாதையும், அன்பும் பொழிபவர் ஜான்பாண்டியன்.. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரப்போகும் தேர்தலுக்கு தங்களுடைய கட்சி தயாராக உள்ளதுடன், அதிமுக பிரச்சனை குறித்தும் பேசினார்,

சாதி வாரி கணக்கெடுப்பு
"அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றுதான் என்னால் சொல்ல முடியும்... காரணம், 90 சதவீதம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின்னாடிதான் நிற்கிறார்கள். இதனால் ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றது தவறானது... அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது.. தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் நாங்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் ஒரு கோரிக்கையாக உள்ளது.. வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

யூகங்கள்
கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாக எடுக்கும் நிலைப்பாடு அதை அப்போது பார்ப்போம்.. எம்பி தேர்தலில் கூட்டணி குறித்தும், தான் போட்டியிடுவது குறித்தும் அன்றைய சூழலில் முடிவெடுப்போம்.. அதிமுக அமைச்சராக இருந்தாலும் திமுக அமைச்சராக இருந்தாலும் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் அவர் கார் மீது செருப்பை எறிவது, குற்றம் தான்.. இதை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கின்றது என்று கூறியுள்ளார்.. தேர்தலுக்கு தயாராகி வரும், ஜான் பாண்டியன், எப்படியும் எடப்பாடி தரப்பிடம்தான் கூட்டணி வைக்கக்கூடும் என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன.












Click it and Unblock the Notifications