"நீங்க பிரஸ்ஸா? ஓ மை காட்".. தெறித்து ஓடினாரா மோடி.. வெட்டி ஒட்டுவதே திமுக .. சொல்றது யார்னு பாருங்க
பாஜகவை சப்போர்ட் செய்து கஸ்தூரி ஒரு டிவிக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: 2000 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்ததை நீங்கள் வெட்டி, ஒட்டி, பொய்யெல்லாம் கலந்து, தப்பாக மொழிபெயர்த்து, 75 வருடமாக நீங்கள் அரசியல் செய்யவில்லையா? ஒருவர் பேச்சு வெட்டி ஒட்டுவது திமுகதான் என்று கஸ்தூரி காட்டமாக சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே, திமுக அமைச்சர்கள் ஆங்காங்கே பேசிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுக-வில் நடைபெறவிருக்கும் உட்கட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரையோடு எச்சரிக்கை விடுத்திருந்தார்.. கடந்த ஒரே வாரத்தில் முதல்வர் வெளியிட்ட 2வது எச்சரிக்கை அறிக்கை இதுவாகும்..

பிரபல நடிகை
அந்தவகையில், பிரபல சேனல் ஒன்றில் இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டது.. அதில், திட்டமிட்டு அரசு மீது களங்கம் கற்பிக்கப்படுகிறதா? முதல்வரின் இந்த 2வது அறிக்கையின் பின்னணி என்ன? என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.. இதில், கலந்துகொண்ட நடிகை கஸ்தூரியிடமும் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கஸ்தூரி கூறிய பதில்கள் இவைதான்: "பாவம் நம்ம முதல்வர்.. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு, கட்சிக்காரர்களுக்குதான் கடிதம் எழுதி கொண்டிருக்கிறார்.. நான் எப்பவுமே திமுகவின் சில கொள்கைகளுக்கு மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவிப்பவள்..

எதிர்வீடு
இருந்தாலும், தனிப்பட்ட முறையிலும், ஸ்டாலினின் ரசிகையாகத்தான் இருந்து வருகிறேன். அவர் எம்எல்ஏவாக இருந்ததில் இருந்து, மேயராக இருந்ததில் இருந்து, துணை முதல்வராக இருந்ததில் இருந்து, இன்னைக்கு முதல்வராக இருக்கும்வரை அவரது செயல்பாடுகளை பார்த்து ரசித்துள்ளேன்.. எதிர்வீடுதான்.. அதனால் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.. ஸ்டாலின் சொல்வது ஒவ்வொன்றும் சரியான அறிவுரையே.. சோஷியல் மீடியாவில் இன்றைக்கு மிக மிக தேவையான அறிவுரையும்கூட.. ஆனால், அதெலலாம் கண்ணாடியை பார்த்து பேசுவது போலாகிவிடுகிறது..

மெயின்ஸ்ட்ரீம் மீடியா
இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு வீடியோ அறிக்கை தந்தாரு.. "எல்லாரும் அசிங்கமாக பேசுவார்கள், குடும்பத்தில் இருக்கும் பெண்களை இழுப்பார்கள், அதனால் அனைவற்றையும் கடந்து போங்கள்" என்று சொன்னார்... கட்சிக்காரர்களின் செயல்பாடுகளை மற்றவர்களுக்கு அறிவித்துவிட்டார்.. அதேபோலதான் இப்பவும் நடக்குது.. நீங்கள் எல்லாரும் கவனமாக இருங்க, சோசியல் மீடியாவில் ஒரு புடி புடிச்சிடாறாங்க என்று சொல்லும்போதே, இவர்களின் இத்தனை வருட திராவிட மாடல்தான் எனக்கு ஞாபகம் வருது.. இத்தனை நாளும் இந்த வெட்டி ஒட்டும் கலையில், மெயின்ஸ்ட்ரீம் மீடியா மட்டுமே இருந்தபோது, திராவிட மாடல் நல்லா ஒர்க் அவுட் ஆகி கொண்டிருந்தது.

பச்சை பொய்
ஆனால், இன்னைக்கு சோஷியல் மீடியா என்பது, களத்தை சமப்படுத்தும் புதிய சக்தியாக வந்துவிட்டது.. சோஷியல் மீடியாவில் ஒருவரின் குரலை மட்டும் அமுக்கி, இன்னொருவர் குரலை மட்டும், அதுவும் தேவையானதை மட்டும் வெளியே காட்டவே முடியாது.. இங்கே அமுக்கினால், அங்கே உப்புகிறது.. எத்தனையோ வெட்டுதல், ஒட்டுதல் இன்னைக்கும் நடக்குது.. 2000 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்ததை நீங்கள் வெட்டி, பொய்யெல்லாம் கலந்து, தப்பாக மொழிபெயர்த்து, 75 வருடமாக நீங்கள் அரசியல் செய்யவில்லையா? இப்ப உங்களுக்கு வலிக்குது என்பதால், இந்த அறிவுரையே வந்திருக்கு..

ஓ மை காட்
நான் மோடிக்கு சொம்பு தூக்கவில்லை, நான் பாஜகவும் கிடையாது.. ஆனால், உண்மையை பொய்யாக மாற்றும் கலையை பார்த்து வியந்துவிட்டேன்.. ஒருமுறை பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.. "நான் உள்ளே பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் எல்லாரும் வெளியேவா காத்து கொண்டிருந்தீர்கள், ஓ மை காட்.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே" என்று மோடி சொல்கிறார்.. ஆனால், இது வெளியே எப்படி திரிந்து வந்தது தெரியுமா? செய்தியாளர்களை பார்த்து, "நீங்க பிரஸ்ஸா? ஓ மை காட்" என்று பயந்து ஓடுற மாதிரி காட்டிவிட்டார்கள்.. இந்த வேலையை செய்வது யார் என்று இப்போது சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பியிருந்தார் கஸ்தூரி.












Click it and Unblock the Notifications