ஸ்ரீபெரும்புதூருக்கே குஷி.. ஸ்டாலினின் சர்ப்ரைஸ் நிச்சயம்? சென்னையை வட்டமிடும் பாஜக கண்கள்.. சூப்பர்
சென்னை: ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி - இவர்கள் 3 பேரும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்ற ஆர்வம் காங்கிரசுக்கு இருக்கிறதோ இல்லையோ.. பாஜகவுக்கு அதிகமான ஆர்வம் எழுந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார்.
கடந்த வருடம் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தேசிய அளவில் பேசப்பட்டது.. அதைவிட முக்கியம், அந்த யாத்திரையை ராகுல், தமிழகத்தில் இருந்து துவக்கியதுதான்..

இந்த யாத்திரையை பாஜக முதல்நாளே கிண்டலடித்தது.. ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமானும் கிண்டலடித்தார்.. ஆனாலும், இந்தியா முழுவதும் ராகுலின் இந்த நடைபயணம்தான், இந்த வருடம் அவரது அரசியலை தூக்கி நிறுத்தி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் துவக்க காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த சில வருடங்களாகவே, ராகுலின் பேச்சில் தமிழ்நாட்டு அரசியல் நெடி அதிகமாகவே காணப்படுகிறது.. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
தேர்தல்: கடந்த லோக் சபா தேர்தலில் கேரளாவில் நின்று வெற்றிப்பெற்ற ராகுல் காந்தி, 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும், அதற்காகவே, தமிழகத்தின் மீது அக்கறை இருப்பது போல காட்டுவதற்கு ஒத்திகைப் பார்த்து வருவதாகவும் கருதப்பட்டது.
"தமிழ்நாட்டை தன் வாழ்நாளில் பாஜக ஆளவே முடியாது" என்ற வார்த்தையை, அன்று பேரவையில் ராகுல் துணிந்து சொன்னதற்கு காரணமும் இதுதான் என்றார்கள். அதுமட்டுமல்ல, ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற விஷயம்கூட அப்போது பரபரத்தது.. தன்னுடைய அப்பா உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை செண்டிமெண்ட்டாக ஸ்டாலினிடம் கேட்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
எதிர்ப்புகள்: இப்படிப்பட்ட சூழலில், ராகுல் காந்தி பொறுத்தவரை வயநாடு தொகுதியிலேயே மறுபடியும் களம் இறங்க திட்டமிட்டுள்ளாராம்.. ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடுமையான எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். ராகுல் நினைத்தால், உத்தரபிரதேசத்திலும் போட்டியிடலாம் என்றாலும், வயநாட்டிலேயே அவரது பார்வை அழுத்தமாக விழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.
சோனியாகாந்தி இந்த முறை ரேபரேலி பக்கம் போகாமல், மேல்சபை எம்பியாக முடிவு செய்துவிட்டார். எனவே, ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கணிப்புகள் பரபரத்த நிலையில், ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிரியங்கா: அப்படியானால், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா களமிறங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவாம்.. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட பிரியங்காவுக்கு விருப்பம் இருக்கிறதாம்.. அதற்கேற்றவாறு, எப்படியாவது பிரியங்காவை தமிழகம் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்,.
ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே வயநாட்டில் களமிறங்க முடிவு செய்துள்ளதால், பிரியங்காவும் தென்மாநிலத்திலேயே போட்டியிட்டால் சரியாக இருக்காது என்று நினைக்கிறார்களாம்.
ஸ்டாலின் : ராகுல் - பிரியங்கா 2 பேருமே, தென்மாநிலம் வந்துவிட்டால், வட மாநிலங்களில் காங்கிரசுக்கு இன்னும் அதிகமாகவே பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால்தான், பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்கிறார்கள். ஒருவேளை ஸ்ரீபெரும்புதூரை ராகுல் கேட்டாலும் சரி, பிரியங்கா கேட்டாலும் சரி, அதற்கு முதல்வர் ஸ்டாலினும் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என்றே நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications