மெகா பிரச்சனை வரும்! ஆளும் டீமிற்கு மெசேஜ் அனுப்பிய ஓபிஎஸ்? உள்ளே வந்த "தலைகள்"? கூட்டத்துக்கே செக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தற்போது பொதுக்குழுவிற்கு தயாராகி வரும் நிலையில்.. சில ரத்தத்தின் ரத்தங்களோ.. என்ன பொதுக்குழுவா? அதெல்லாம் நடக்கவே சான்ஸ் கம்மிதான்... ஒன்னு தேதி தள்ளி போகும்.. இல்லை பாதியில் கூட்டம் நிற்கும் என்கிறார்கள். என்னங்க சொல்றீங்க என்று மேற்கொண்டு விசாரித்தால் பல அதிர்ச்சி தகவல்களை புட்டு புட்டு வைத்தனர்.

வியாழக்கிழமை.. இந்த வாரம் சாய் பாபா கோவிலை விட அதிக கூட்டம் இருக்க போகும் இடம் என்று பார்த்தால் அது ராயப்பேட்டை அதிமுக அலுவலகமாகத்தான் இருக்கும். வியாழக்கிழமை நடக்க உள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி அண்ட் கோ தீவிரமாக காத்து இருக்கிறது.

வெற்றிகரமாக கூட்டத்தை கூட்டி.. பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற அவரின் டீம் தயாராக இருக்கிறது. கூட்டம் எல்லாம் நடத்தலாம்.. ஆனால் பொதுச்செயலாளர் தொடர்பாக எந்த தீர்மானமும் கூடாது என்பதில் ஓபிஎஸ் தெளிவாக இருக்கிறார்.

ஓபிஎஸ்ஸுக்கு தெரியும்

ஓபிஎஸ்ஸுக்கு தெரியும்

ஓபிஎஸ்ஸுக்கு தற்போது மாவட்ட செயலர்கள் ஆதரவு பெரிதாக இல்லை. ஆனால் அதற்கும் பொதுக்குழுவிற்கும் சம்பந்தம் இல்லை. பொதுக்குழுவில் 2300 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை பொறுத்தே அதில் முடிவுகள் மாறும். பொதுக்குழுவில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் இருப்பதாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி டீமில் இருப்பதாக அதிமுக தரப்பு கூறுகிறது.

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

இதற்கான கணக்கெடுப்புகளை ஓபிஎஸ் எடுத்து இருக்கிறாராம். ஒருவேளை பொதுச்செயலாளர் தொடர்பாக தனி தீர்மானம் வந்தால், பொதுக்குழுவை பாதியில் நிறுத்த ஓபிஎஸ் உத்தரவிடுவார். ஆனால் அது நடக்காத பட்சத்தில் ஓபிஎஸ் வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நமக்கு சாதகமாக எவ்வளவு வாக்குகள் விழும் என்று ஓபிஎஸ் தீவிரமாக கணக்கெடுத்து வருகிறாராம். இந்த நிலையில்தான் ஆளும் தரப்பின் உதவியை நாட அவர் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சிக்கலை ஏற்படுத்தலாம்

சிக்கலை ஏற்படுத்தலாம்

அதன்படி தீர்மானக்குழுவிலேயே ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு மோதல் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் பொதுக்குழு கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். பொதுக்குழுவில் மோதல் வந்தால் சட்ட ரீதியாக பெரிய பிரச்சனை வரும். ராயப்பேட்டை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கு மோதல் ஏற்பட்டு, வெளியே மோதல் பரவினால் சிக்கல் ஆகும் என்ற பாயின்டை வைத்து.. பொதுக்குழுவை பாதியில் நிறுத்த ஓபிஎஸ் தரப்பில் சிலர் முயன்று வருகிறார்களாம்.

உதவியை நாடலாம்

உதவியை நாடலாம்

அதாவது உள்ளே ஏதாவது மோதல் ஏற்பட்டால்.. ஆளும் தரப்பு மூலம் போலீசை களமிறக்கி, கூட்டத்தை பாதியில் நிறுத்த முடியும். சட்ட ஒழுங்கை காரணம் காட்டி கூட்ட நிர்வாகிகளை வெளியேற்ற முடியும். இதன் மூலம் பொதுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்த முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு ஒரு திட்டத்தில் இருக்கிறதாம். இதற்காக ஆளும் தரப்பில் தனக்கு நெருக்கமாக இருக்கும் சில தலைகளுடன் ஓபிஎஸ் தரப்பு போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆளும் தரப்பை வைத்து இந்த கூட்டத்திற்கே செக் வைக்க நினைக்கிறாராம். அதிமுக கூட்டத்தில் பெரிய மோதல் வரலாம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் போனில் பேசி இருக்கிறார்களாம்.

Recommended Video

    #AIADMK பிரமுகர்கள் சொல்வது என்ன? | AIADMK Single Leadership Crisis | EPS VS OPS | *TamilNadu
    திமுக எதுவும் தலையிடவில்லை

    திமுக எதுவும் தலையிடவில்லை

    ஆனால் ஆளும் திமுக தரப்போ வெயின்ட் அண்ட் வாட்ச் என்று நிலையில்தான் இருக்கிறதாம். ஓபிஎஸ் தரப்பிற்கு ஆளும் தரப்பு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இதில் தலையிட விரும்பவில்லை என்கிறார்கள் ஆளும் தரப்பினர். இது அதிமுக மேட்டர். இதில் தலையிட நாங்கள் என்ன பாஜகவா? ஜெயலலிதா இறந்த போது அதிமுகவை கலைத்து நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியும். அப்போதே அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.

    தலையிடாது

    தலையிடாது

    கிட்டத்தட்ட 90 எம்எல்ஏக்கள் இருந்தும் நாங்கள் அமைதியாக, கண்ணியமாக தேர்தலுக்காக காத்து இருந்தோம். அப்படி இருக்கையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக விவகாரத்தில் இப்போது போய் நாங்கள் தலையிடுவோமா என்று திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் ஒருவேளை வெளியே மோதல், கலவரம் என்று வந்தால் சட்ட ரீதியாக போலீஸ் செயல்படும். அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு இல்லை. அது சட்ட ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+