பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்.. குழந்தைகளிடம் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் மா.சு அளிக்கும் விளக்கம்
சென்னை: பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது தவறான கருத்து எனக் கூறிய மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் இப்போது கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மழை நீர் சேகரிப்பு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் மட்டும் 148 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்ற அவர், சென்னையில் உள்ள 25 நீர்நிலைகளில் 200 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது சென்னையில் 10.94 குடியிருப்பு உள்ளது அதில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சினை இல்லாத நகர்
மீதம் உள்ள 2 லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் தரப்பட உள்ளோம். வருங்காலத்தில் சென்னை தண்ணீர் பிரச்சனையே இல்லாத நகராக மாறும். திருமுல்லைவாயில் பகுதியில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கக் கூடிய தண்ணீர் தொட்டி செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பள்ளிகள் திறந்தவுடன் கொரோனா
தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பு பற்றிப் பேசிய அவர், "செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குப் பரவும் முன் தொற்று உறுதி செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் தான். அவர்களுக்குச் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கோவை கேரளா எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

வேக்சின் பணிகள்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 9 மாவட்டங்களில் 100 % தடுப்பூசி என்ற இலக்கை எட்ட ஏதுவாக கூடுதலாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். 9 மாவட்டங்களில் கூடுதலாகத் தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. அதேபோல, கேரளாவிலும் மிகச் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறார்களுக்கு ஏற்படும் அரிய நோய்
மேலும், தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி செலவாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்கான உரியச் சிகிச்சை அளிக்கப்படும்.
Recommended Video

குழந்தைகளுக்கு வேக்சின் எப்போது
இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம். அது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்றார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications