Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காவி" லீலைகள்.. கொள்கையை "கலரில்" காட்ட கூடாது.. ஆஹா.. புட்டு புட்டு வெச்சிட்டாரே டாக்டர் காந்தராஜ்

தமிழக பாஜகவுக்கு டாக்டர் காந்தராஜ் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவி உடைகள் மட்டுமே, ஒருவரது புனிதத்தை காட்டுவதாகவும், பாஜகவின் கொள்கையை காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.. செயல்பாடுகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்று டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்து ஒன்றையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், மூத்த அரசியல் விமர்சகரும், டாக்டருமான காந்தராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில் பாஜகவில் நடக்கும் சர்ச்சை சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருந்தார்.

"பாஜகவில் இப்படி நடப்பதெல்லாம் சகஜமானதுதான்.. காயத்ரி ரகுராம் ஏன் கோபித்து கொண்டார் என தெரியவில்லை.. கேடி ராகவன் வீடியோ விவகாரம் வந்தபோதே இதெல்லாம் பெரிய பிரச்சனையாக வெடித்திருக்க வேண்டும்..

செயல்வீரர்

செயல்வீரர்

காயத்ரி விவகாரத்தில், ஆடியோவை வைத்துதான் விவகாரம் நடக்கிறது.. ஆனால், கேடி ராகவன், "செயல்வீரராகவே" இருந்தார்.. கட்சிக்குள்ளே சகஜமாக நடப்பதை, பிரச்சனையாக்கிவிட்டதால்தான், காயத்ரியை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்கள்.. ஆண்கள் இப்படித்தான் பெண்களிடம் நடந்துகொள்வோம், இதை போய் வெளியே சொல்லிவிட்டாயே என்று காயத்ரி மீது கோபம் வந்துள்ளது.. அதனால்தான் நீக்கிவிட்டார்கள்.. பாஜககாரர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் திருச்சி சூர்யாவும் நடந்து கொண்டுள்ளார்..

 சைதை சாதிக்

சைதை சாதிக்

திருச்சி சூர்யா அந்த பெண்ணை திட்டினாரே, அந்த பெண் ஏதாவது வருத்தப்பட்டாங்களா? யாரிடமாவது சென்று புகார் சொன்னாங்களா? முறையிட்டார்களா? அவரே அமைதியாக இருக்கும்போது, மற்றவர்கள் எல்லாம் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள், அவரை தவிர, மற்றவர்கள் எல்லாம் ஏன் இப்படி துடிக்கிறார்கள்? என தெரியவில்லை.. சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்களே? ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தார்களே? இவங்க கட்சிக்குள்ளேயே இப்படி நடந்திருக்கிறதே? அதற்கு என்ன நடவடிக்கை? 7 நாள் பேசாதே என்பது ஒரு நடவடிக்கையா? உடனே அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் புனிதமாகிவிட்டதா? இதுதான் இவர்கள் நடவடிக்கை என்றால், சைதை சாதிக்கையும் பேசாதே என்று திமுக சொல்லி இருக்கலாமே" என்று காட்டமாக கூறியிருந்தார்.

 காவி டிரஸ்

காவி டிரஸ்

இந்நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு காந்தராஜ் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியிலும் கிட்டத்தட்ட இதே கருத்தை முன்வைத்து, தமிழக பாஜகவை விமர்சித்துள்ளார்.. முக்கியமாக, தீபிகா படுகோனே, காவி பிகினி அணிந்த விவகாரத்தில் பாஜக பொங்கியெழுந்தது முதல், தமிழக பாஜக செயல்பாடுவரை காந்தராஜ் தன் கருத்துக்களையும், அனுமானங்களையும் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.. அந்த பேட்டியை சிலர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.. அதன் சுருக்கம்தான் இது:

 கண்ணியம்

கண்ணியம்

"பத்திரிகையில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு, பாஜகவில் யார்மீதும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்ட முடியாது.. அதேபோல ஊடகங்களை வைத்துக்கொண்டு, ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்றும் முடிவு செய்ய முடியாது.. அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் பெயரை அவராகவே கெடுத்து கொள்கிறாரே தவிர, ஊடகங்கள் அதற்கு காரணம் இல்லை.. அவர் பேசும் பேச்சுக்களை வைத்து பார்க்கும்போது, முதிர்ச்சியற்ற தலைவராக தெரிகிறார்.. அவரது பேச்சுக்களில் கண்ணியம் இல்லை, விஷயங்களும் இருப்பதில்லை.. கொள்கை ரீதியான விளக்கங்களும் இல்லை.. போராட்டங்களும் இல்லை.. விளையாட்டு பிள்ளை மாதிரி பேசினால் எப்படி?

 புயல் மலை

புயல் மலை

எல்.முருகனை அண்ணாமலை எதிர்ப்பதாக பேச்சு உள்ளது.. அதற்கு காரணம், எல்.முருகனை ஓரங்கட்டியதே அண்ணாமலைதானே.. அட்ரஸ் இல்லாத மந்திரியாக அவரை ஆக்கிவிட்டார்கள்.. அந்த கோபமாகவும் இருக்கலாம்.. இதெல்லாம் உட்கட்சி பிரச்சனை.. கண்டிப்பாக எல்லா கட்சியிலும் இது இருக்கத்தான் செய்யும்.. 2 வருடமாக தமிழகத்தில் அடிபட்டு கொண்டிருந்த பாஜக தலைவர்களின் பெயர்கள் அத்தனையையும், புயல் மாதிரி அண்ணாமலை வந்து அடித்து ஓரங்கட்டிவிட்டாரே.. பாஜக என்றாலே அண்ணாமலை என்றாகிவிட்டதே.. அந்த சாமர்த்தியம் அண்ணாமலைக்கு உள்ளது.. அதற்கு அவருக்கு நாம் வாழ்த்துக்களை சொல்லலாம்.

 சல்லாபம்

சல்லாபம்

ஆனால், இன்னைக்கு ஆடியோ, வீடியோக்களை வைத்துதான், அந்த கட்சியே நடந்து கொண்டிருக்கிறது.. "இன்னும் ஆடியோ, வீடியோவை காணோமே, ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று அந்த கட்சியில் உள்ளவர்களே சொல்லும் அளவுக்கு, நிலைமை உள்ளது.. இதெல்லாம் அவர்களாகவே கெடுத்துக் கொண்டதுதான். அக்கட்சியின் உட்கட்சி பூசல் பற்றி நாம் பேச வேண்டியது கிடையாது.. அண்ணாமலை போன்றவர்கள் எல்லாம் உச்சவ மூர்த்திகள்தான்.. "மூலவர்கள்" டெல்லியில் இருக்கிறார்கள்.. இங்கு நடப்பது எல்லாம் டெல்லிக்கு தெரியாமல் இல்லை.. எல்லாமே தெரியும்.. அதனால், அண்ணாமலையே எல்லா முடிவுகளையும் எடுத்து செய்கிறார் என்று சொல்வது தவறு..

 நிர்வாண சாமியார்

நிர்வாண சாமியார்

காவி டிரஸ் யாரும் அணிய கூடாதா? நிர்வாண சாமியாரையே நாம் பார்த்திருக்கோமே.. ஒரு சாமியார் சிறுநீர் கழிப்பதை, பிடித்து குடிக்கும் போட்டோவும் வந்துள்ளதே.. அதைவிட இதெல்லாம் மோசமாக போய்விட்டதா என்ன? அதில் இல்லாத ஆபாசமா இதில் எல்லாம் இருக்கிறது? கும்பமேளா சமயத்தில் போய் பாருங்க.. அங்கே ஊர்வலம் எப்படி நடக்கறது என்று பாருங்கள்.. வெளியில் சொல்ல முடியாது.. காட்டுமிரண்டித்தனம் இருக்கும்.. காவி கலரில் டிரஸ் போட்டால், அது உங்களை சுட்டிக்காட்டுவதாக ஏன் எடுத்து கொள்ள வேண்டும்? காவி யாரும் போடக்கூடாதா? புத்தபிட்சுகள் கூட காவி போடுகிறார்களே.. சமணர்களும் காவி நிறம்தான் போடுகிறார்கள். அவர்களையும் உங்கள் கட்சி என்று எடுத்து கொள்ளலாமா?

 சன்னியாசம்

சன்னியாசம்

வெள்ளை உடை, கருப்பு உடை அணிபவர்களும் உண்டு.. காவி மாத்திரம் மட்டுமே சன்னியாசத்தை தருவதில்லை. காவியை அணிந்தால் அழுக்கு தெரியாது.. அதுக்குதான் காவி அணிவார்கள்.. காவி உடைகள் மட்டுமே, உங்கள் புனிதத்தை காட்டுவதாகவும், உங்கள் கொள்கையை காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.. அதேபோல, எல்லா காலத்திலும் தேர்தல் ஆணையத்தை நம்பியே வாழ்க்கை ஓட்டவும் முடியாது.. தேர்தல் ஆணையமே காலை வாரிவிட்ட கதையை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.. கேடி ராகவன் விவகாரம் விசாரிக்க கமிட்டி அமைத்தார்கள்.. என்ன ஆனது?

இமேஜ்

இமேஜ்

ஆனால், நான் கேட்பது என்னவென்றால், பாஜகவில் இப்படி பாதிக்கப்படுவதாக சொல்லும் பெண்கள் யாராவது இதுவரை புகார் தந்திருக்கிறார்களா? அந்த பெண்கள் யாருமே புகார் சொல்ல முன்வரவில்லையே.. ஒரு புகாரும் தராதபோது, எப்படி அதையெல்லாம் குற்றமாக கருத முடியும்? யாராவது திருச்சி சூர்யா மீது கேஸ் போட்டார்களா? கடைசியில் அக்கா - தம்பி என்று விவகாரம் முடிந்துவிட்டதே.. ஆனால், பொதுமக்களிடம் பாஜகவின் இமேஜ் மோசமாகிவிட்டது. கேலி, கிண்டல் அதிகமாக உள்ளது.. எனவே, அதில் இருந்து வெளியே வர அக்கட்சி பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் காந்தராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+