வீட்டுவசதி வாரியம் தந்த "விற்பனை பத்திரம்" சர்ப்ரைஸ்.. திடீரென வந்த அறிவிப்பு.. இனிமேல் பெரிய நிம்மதி
சென்னை: விற்பனை பத்திரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. வீட்டு வசதி அதிகாரிகள் தெரிவித்த இந்த நம்பிக்கையால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
விற்பனை பத்திரம் என்பது, ஒரு சொத்தினை விற்பனை செய்பவர், அதன் உரிமையை வாங்குபவருக்கு மாற்றிக் கொடுக்கும் முக்கியமான சட்ட ஆவணமாகும்... இதன்மூலம் வாங்குபவர் அந்த சொத்தின் முழு உரிமையை பெறுகிறார்..

முக்கிய ஆவணம்: சொத்து உரிமை பரிமாற்ற வழக்கில் விற்பனை பத்திரம் மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது.. குத்தகை பத்திரம், அடமான பத்திரம், போலவே, விற்பனைப் பத்திரமும் கடத்தல் பத்திரத்தின் ஒரு வகுப்பாகும்... ஒரு சொத்தை விற்கும்போது, விற்பனை பத்திரத்தின் ஆவணங்கள் கைக்கு வந்துசேரும்.
இந்நிலையில், வீட்டு வசதிய வாரியம் தரப்பில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், தனியார், பிற அரசு துறை நிலங்களை கையகப்படுத்தும் வீட்டு வசதி வாரியம், குடியிருப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. இதில், கட்டப்பட்ட வீடுகள், உருவாக்கப்பட்ட மனைகளை வாங்குவதற்காக, பொதுமக்களிடம் பெரும் போட்டியே உள்ளது.. இதன்காரணமாக, வாரிய திட்டங்களில் காணப்படும் வில்லங்கத்தால், வீடு, மனை வாங்குவோர் தவிப்புக்கு உள்ளாவதாக தெரிகிறது.
வாரிய அதிகாரிகள்: அதேபோல, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நிலத்தின் இறுதி விலையை நிர்ணயிப்பதிலும், சில வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் புகார்கள் கிளம்பின. இப்படி ஒருசில வாரிய அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாக, தமிழகத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவிப்பதாகவும், பரபரப்புகள் கிளம்பின.
இதுபோன்ற புகார்களுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.. இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "வீட்டுவசதி வாரியத்தில் தவணை முடிந்தும், விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன... இதைத் தொடர்ந்து, இந்த 3 ஆண்டுகளில் மட்டும் 13,641 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு: பல இடங்களில் தவணை செலுத்தி முடிந்தாலும், ஒதுக்கீட்டாளர் உயிரிழந்த நிலையில், வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் தாமதமும் ஏற்படுகிறது.. இப்போதைய நிலவரப்படி, வீடு, மனைக்கான தவணை தொகையை செலுத்தி, 20,554 பேர் விற்பனை பத்திரம் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்குமே விரைவில் பத்திரம் வழங்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த உறுதியானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்துவருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications