"ரகசியம்".. ஆ. ராசா பற்ற வைத்த நெருப்பு.. "மேலிடம்" காதில் கிசுகிசுத்த பாஜக?.. தெம்புடன் திமுக.. ஏன்
ஆ.ராசா பேசிய பேச்சு பற்றி பிரதமர் மோடியிடம் புகார் சொல்லப்பட்டதாக தெரிகிறது
சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்திருந்த நிலையில், தமிழக பாஜக சீனியர்கள், திமுக பற்றி புகார்களை வாசித்ததாக தகவல் ஒன்று கசிந்து வருகிறது..
கடந்த மாதம் திமுக மூத்த தலைவரும், எம்பியுமான ஆ ராசா நாமக்கல்லில் பேசிய பேச்சு, தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் அதிர்வலையை உருவாக்கியது.
காரணம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடியாகவே கோரிக்கை விடுத்து, ஆ ராசா பேசியிருந்தார்... நாமக்கல்லில் நடந்த திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ராசா பேசியதன் சுருக்கம் இதுதான்:
"நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்
பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்... பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

கெஞ்சி கேட்டுக்கறேன்
அதனால், பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

நாராயணன் திருப்பதி
ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக கொந்தளித்தது.. முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.. ஈ.வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவு பட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுக விற்கான மிரட்டல் என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி விமர்சித்தார்..

ஆ. ராசா - நாமக்கல்
அதேபோல, மூத்த தலைவர் வானதி சீனிவாசனும், ''ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் என்பது திமுக அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை திமுகவுக்கு வாக்களிப்பவர்களே ஏற்க மாட்டார்கள். தமிழகம் என்றுமே தேசியத்தின் பக்கம்தான். எனவே, நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆ.ராசாவின் பேச்சை, இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.

றெக்கை கட்டி பறந்தது
இப்படி ராசா பேசிய பேச்சு, தீயாய் அரசியல் களத்தை வட்டமடித்த நிலையில், மீண்டும் இந்த விஷயத்தை கிண்டி உள்ளது பாஜக.. அதாவது நேற்று முன்தினம் இரவு, கவர்னர் மாளிகையில் பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. ஆனால், இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை.. அதேசமயம், சில யூகங்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.. எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக சீனியர்கள் புகார்களை சொன்னதாக செய்திகள் கசிந்தன.. பிறகு திமுகவை பற்றி பிரதமரிடம் புகார் சொன்னதாக செய்திகள் கசிந்தன.

ஆ. ராசா
அந்த வகையில், ஆ.ராசா பேச்சு பற்றியும், திமுக அரசு பற்றியும் புகார்களை அடுக்கினார்களாம்.. குறிப்பாக, "திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் தமிழகத்தில் மத மாற்றங்கள் அதிகரித்து விட்டன.. தமிழக இளைஞர்களிடம் பிரிவினைவாத சிந்தனை நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறது திமுக.. ஆனால், பிரிவினைவாதம் பேசும் திமுகவோ, தங்கள் கட்சியினரை கண்டு கொள்வது கிடையாது.. அதிலும் திமுக துணை பொது செயலாளரான ஆ.ராசாவே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரிவினைவாதத்தை தூண்டு வகையில் பேசினார் என்றெல்லாம் லிஸ்ட் போட்டு குறை கூறினார்களாம்.. இவை அனைத்தையும் பிரதமர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டாராம்..

டேமேஜ்
ஒருவேளை, தமிழக பாஜக, திமுகவை டேமேஜ் செய்யும்விதமாக புகார்களை சொன்னது உண்மையாகவே இருந்தாலும், அதை திமுக பாசிட்டிவ்வாகவே கருதுகிறதாம். காரணம், எங்கோ நாமக்கல்லில் ஆ.ராசா பேசியபோது, "பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்.. எங்களை தனித்தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என்பதை பாஜக தரப்பே நேரடியாக பிரதமரிடம் எடுத்து சொல்வது இன்னும் சிறப்புதான்.. இதன்மூலம் தங்கள் ஆதங்கம் மேலிடத்துக்கு நன்றாகவே புரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. ஆக மொத்தம், பிரதமர் வந்து சென்ற அரசியல் அதிர்வு இன்னும் தமிழகத்தை விட்டு நீங்காமல் உள்ளது..
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications