துரத்தி துரத்தி 27 பேரை கடித்த வெறி நாய்.. ரேபிஸ் உறுதி.. சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் சொல்வதென்ன?
சென்னை: சென்னையில் ராயபுரத்தில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ராயபுரத்தில் வெறிநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு உரிய தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெரு நாய்களால் மற்றொரு புறம் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நாய்கள் பகலிலும் இரவு நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வருகின்றன.

பள்ளிக்கு செல்லும் சிறுவர்களையும் வாகனங்களையும் கூட்டமாக துரத்துவது சென்னை மாநகர தெருக்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் தெருக்கள் முழுவதும் நாய்களின் ஆட்சிதான். எல்லையை பாதுகாக்க கூட்டமாக அணிவகுப்பதும் அந்நிய படையெடுப்பாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.
அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இரவு நேரம் வேலை முடித்து வீடு திரும்புவோர், ரயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்வோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை. காலை நேரத்தில் வாக்கிங் செல்லக்கூட முடிவதில்லை.
சென்னை ராயபுரம், ஜி.எஸ். சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய் ஒன்று அங்கிருந்த பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
தெரு நாய் கடித்ததில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அத்துடன் அந்த நாயை அப்பகுதியில் உள்ளவர்கள் கல்லால் அடித்து கொன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிரேத பரிசோதனைக்காக நாயை எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் ராயபுரத்தில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ராயபுரத்தில் வெறிநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு உரிய தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சட்ட சிக்கலால் தெருநாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்ல கூடாது, கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலே விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதேபோல பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை நாயை கருத்தடை செய்யக் கூடாது எனவும் சட்டவிதிகள் கூறுகின்றன.
இவ்வாறு கருத்தடை செய்து விடப்படும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்தாலும், மக்கள் தடுப்பூசி போட்டு தான் ஆக வேண்டும். இதில் தவறிவிடப்பட்டு, கருத்தடை செய்யாமல் விடப்படும் எந்தஒரு நாயும் சுமார் 6 முதல் 7 குட்டிகளை ஈன வாய்ப்புண்டு. இதனால் மீண்டும் அதே தெருக்களில் நாய்களின் கும்பல் பரவலாக சுற்றித் திரியும்.
இதுவரை சென்னை மாநகராட்சியில் மட்டும் 8 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது சென்னையில் 3புதிய கருத்தடை மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
கால்நடை பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் தெரு வோரங்களில் பட்டினியாக கிடக்கும் நாய்களுக்கு உணவை அளித்துவிட்டு, பெரும் நன்மை செய்துவிட்டதாக கருதி சென்றுவிடுகின்றனர். ஆனால் அதனால் அந்த தெருமக்கள் படும் அவஸ்தயை அவர்கள் உணருவதில்லை. வாகன ஓட்டிகளின் துன்பத்தை கண்டு கொள்வதில்லை.
உண்மையான கால்நடை ஆர்வலர்களாக இருந்தால், நாய்களை தத்தெடுத்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல் பாதுகாத்து, பராமரித்து, நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்தும் போது எப்போதும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். நாய்கள் பதட்டத்தை உணரும் தன்மை கொண்டவை. வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டும். இப்பிரச்சினையில் முழுமையான தீர்வு காண வேண்டுமானால் சட்டவிதிகளில் திருத்தம் தேவை என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications