சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"84 நாட்கள்".. 2007ல் நடந்ததை மறக்க வேண்டாம்.. ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் வலுவான மெசேஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் விலக்கு மசோதா ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என தமிழ்நாடு அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் திரும்பி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ஆளுநரின் முடிவை எதிர்த்து இன்று தமிழ்நாடு ஆளும் திமுக தரப்பு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பாஜக இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக முன்பே அறிவித்துவிட்டது.

சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா.. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிரடி முடிவு சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா.. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிரடி முடிவு

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இதையடுத்து அதிமுகவும் இன்று இந்த கூட்டத்தை புறக்கணித்தது. காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, புரட்சி பாரதம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீட் விளக்கு

நீட் விளக்கு

மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக்கட்சிகள் ஒருமனதாக ஆதரவு அளித்தது. இதையடுத்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட முடிவு செய்யப்பட்டள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

கூட்டம் முடிவு

கூட்டம் முடிவு

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. மாநில அரசு சட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவேற்றி அனுப்பும் போது அதற்கு ஒப்புதல் அளித்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஆளுநரின் கடமை. அவர் தனது கடமையை தவறிவிட்டார். ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

அரசியல் சாசனப்படி தனது கடமையை ஆளுநர் செய்யவில்லை . அவர் ஏ. கே ராஜன் கமிட்டி அறிக்கையை படிக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படவில்லை. 8 கோடி மக்களின் மன உணர்வுகளை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மசோதாவை அவர் மதிக்கவில்லை. 2007ல் நடந்ததை மறக்க கூடாது. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற தமிழக சட்ட முன் வடிவுக்கு 84 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

Recommended Video

    புதுச்சேரி: ஒற்றர்களாக செயல்படும் ஆளுநர்கள்… நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு!
    84 நாட்கள்

    84 நாட்கள்

    அதை சாதித்து காட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால், தற்போதைய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 142 நாட்கள் கிடப்பில் போட்ட உள்ளார். ஆளுநர் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு கடமையை மீறியுள்ளார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இந்த நிலையில் பெரும்பாலும் வரும் 9ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Don't forget How Tamilnadu got rid of Engineering entrance says CM Stalin in a meeting against governor Ravi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X