நிலவுக்கு பக்கத்தில் தெரியும் செவ்வாய்! நாளை வானில் நடக்கப்போகும் அதிசயம்! பார்க்க மறந்துடாதீங்க
சென்னை: ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, நிலவுக்கு பக்கத்தில் செவ்வாய் கிரகம் தெரியும். ஆனால் நாளை செவ்வாய் கிரகம் மிகவும் நெருக்கமாக இருக்கும். இது போன்ற நடப்பது மிகவும் அரிதானது. மீணடும் எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாது. எனவே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
மெல்லிய பிறை நிலவும், செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிற ஒளியும் வெறும் 3 டிகிரி தூரத்தில் நெருக்கமாக தெரியும். இது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும்.

உண்மையில் இவை மில்லியன் கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை இடைவெளி கொண்டு இருந்தாலும், பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் ஒரு நேர்கோட்டு சீரமைப்பின் காரணமாக அவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகில் இருப்பது போன்று தோன்றும் என்று விஞ்ஞானிகள் கூறியள்ளனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அதிகாலை நேரத்தில் நடக்கிறது. அதோடு செவ்வாய் கிரகத்தின் பிரகாசம் அதிகரித்துக்கொண்டே செல்வதும், நிலவின் மெல்லிய பிறை தோற்றமும் இந்த நிகழ்வை மிகவும் அரிதானதாகவும், அழகானதாகவும் மாற்றுகிறது.
இருப்பினும், தென்மேற்கு பருவமழை காரணமாக பெங்களூரு மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் மேகமூட்டம் நிலவுவதால் இந்த அரிய நிகழ்வை பார்ப்பதில் தடை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது தமிழ்நாட்டின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தெரியும். எனவே தவறவிடாமல் கண்டு ரசியுங்கள். இதை பார்க்க பைனாகுளர், தொலைநோக்கிய என எதுவும் வேண்டியதில்லை. வெறும் கண்களால் பார்த்தாலே தெரியும். விடியற்காலை 4.30-5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இது மிகவும் ரம்மியமாக தெரியும்.
நிலவும், செவ்வாய் கிரகமும்:
நிலவு பூமிக்கு இயற்கையாக அமைந்த துணைகோள். இது சுமார் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கிறது. இது கொஞ்சம் பிரமாண்டமாக தெரிந்தாலும், சூரிய குடும்பத்தில் உள்ள நிலவுகளில், நம்முடையது 5வது இடத்தில் இருக்கிறது. நிலவு இல்லாமல் பூமி இல்லை என்றே சொல்லலாம். கடல்களில் அலைகளை கட்டுப்படுவத்துவது தொடங்கி, பூமியின் சுற்றுப்பாதையையும், சுற்றும் கோணத்தையும் சீராக வைத்திருக்க நிலவு முக்கியம்.
அதேபோல செவ்வாய் கிரகமும் நமக்கு மிக முக்கியமானதாகும். இது பூமியிலிருந்து சுமார் 22.8 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம். இந்த கிரகம் இப்போது உயிருடன் இல்லை. ஒரு காலத்தில் இங்கு தண்ணீர், நீர் வடிவத்திலேயே இருந்தது என்றும், அப்போது இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உயிர்கள் வாழந்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், தண்ணீருக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications