கிரீன் கார்டை விடுங்க! அமெரிக்காவில் வந்த கோல்டு கார்டு விசா.. டிரம்ப் மாஸ் பிளான்! வாங்குவது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக அமலில் இருந்த முதலீட்டாளர்களுக்கான விசாவிற்குப் பதிலாக கோல்டு விசா அறிமுகம் செய்யப்பட உள்ளது. $5 மில்லியன் டாலருக்கு வழங்கப்படும் "கோல்டு கார்டு" விசாவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதாவது அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கே முதலீடு செய்யும் விதமாக, அங்கேயே வாழ்ந்து வரி கட்டும் விதமாக, வேலைகளை ஏற்படுத்தும் விதமாக முதலீட்டாளர்களுக்கான விசா அங்கே அமலில் இருந்தது. இதை EB-5 விசாக்கள் என்று அழைப்பார்கள். EB-5 கள் 1990 இல் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை உருவாக்க கொண்டு வரப்பட்டது. குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் சுமார் $1 மில்லியன் செலவழிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.

Donald Trump

இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது. அதோடு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன்படி அங்கே $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை.

மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் , கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள்.. செல்வந்தர்களாக இருப்பார்கள், அவர்கள் வெற்றி பெற்ற நபர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் நிறைய பணம் செலவழிப்பார்கள்.. எங்களுக்கு நிறைய வரிகளை செலுத்துவார்கள்.. அமெரிக்காவில் நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள், இதனால் அமெரிக்கா மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.. அடுத்த சில நாடுகளில் 1 கோடி கோல்டன் விசாக்களை விற்க முடிவு செய்துள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்" என்று கூறி உள்ளார்.

விசா மாற்றம்

இது போக எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால்.. 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.

அதுவரை தானாகவே அந்த விசா செயல்பட தொடங்கி விடும். எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதை 180 நாட்களாக டிரம்ப் குறைத்துள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்கான கணக்கெடுப்பு பணிகள் மற்றும் ரெய்டுகள் தொடங்கிவிட்டன. இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+