டிரம்ப் + ஏஐ + அவுட் சோர்சிங்.. ஒன்று கூடும் 3 பெரிய பூதங்கள்.. ஐடி ஊழியர்களின் எதிர்காலம் காலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ள வர்த்தக போர் தொடங்கி பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. ஏஐ எழுச்சி, டிரம்ப் வர்த்தக போர், அவுட் சோர்சிங் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

USA Donald Trump

பூதம் 1

ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளையண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.

ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.

பூதம் 2

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.

இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக சர்வதேச அளவில் பல துறைகள் பாதிக்கின்றன. இதனால் ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுபடுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளன. உலகம் முழுக்க உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களுடனான சேவை ஒப்பந்தங்களை அமெரிக்கா நீக்கி உள்ளது. $5.1 பில்லியன் மதிப்பு உள்ள ஒப்பந்தங்களை அத்தியாவசியமற்ற செலவுகள் எனக் குறிப்பிட்டு அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இது உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வணிகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது பொதுவாக ஐடி பணிகளை வெளிநாட்டிற்கு அமெரிக்க அரசு அவுட் சோர்சிங் செய்யும். அதாவது குறைந்த வருமானத்தில் ஊழியர்கள் கிடைப்பதால் பணிகளை வெளியே அவுட் சோர்சிங் செய்வார்கள். முக்கியமாக இந்திய, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இதை அவுட் சோர்சிங் செய்வார்கள். இதைத்தான் தற்போது டிரம்ப் நிறுத்தி உள்ளார். இந்த பணிகளை அமெரிக்காவிற்கு உள்ளேயே செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பூதம் 3:

இது போக ஏஐ வருகை காரணமாக ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள், முக்கியமாக ஜூனியர் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+