அதிபர் ஆன முதல் நாளே.. போடப்போகும் கையெழுத்து இதுதான்.. 3ம் பாலினத்திற்கு செக் வைக்கும் டிரம்ப்
சென்னை: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி பல பாலின பிரிவுகள் அது தொடர்பான கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம். ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்றதும் இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவாராம்.

ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்த பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன. முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இருபாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன. தங்கள் "பலர்" என்று குறிப்பிட விரும்பும் பலரும் உள்ளனர்.
உலகம் முழுக்க முப்பாலினம் என்பது தாண்டி தற்போது LGBTQ என்ற பதம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக LGBT, LGBT+, LGBTQ+, மற்றும் LGBTQIA+ என பல வார்த்தைகளால் இந்த பதம் அழைக்கப்படுகிறது.
அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் மாற்று பாலின பிரிவுகளை கொண்டவர்களை அழைக்க இந்த பதம் பயன்படுத்தப்படும். அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த LGBTQ பிரிவினர் அதிகம் உள்ளனர். அங்கே கொள்கைகள் இன்னும் வெளிப்படையாக இருப்பதால் LGBTQ பிரிவினர் இன்னும் வெளிப்படையாக இயங்க முடிகிறது.
அதோடு இப்போது மக்கள் தங்களை வேறு பாலினமாக அடையாளம் செய்யும்.. வேறு உயிரினமாக அடையாளம் செய்யும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக ஒரு ஆண் தன்னை பெண்ணாக அடையாளம் செய்யும் வழக்கம் போலவே.. ஒரு பெண்.. தன்னை ஒரு பறவையாக.. டிராகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் நிலையும் உள்ளது.
அமெரிக்காவில் இந்த வழக்கம் உச்சம் அடைந்து உள்ளது. பலர் இதை பின்பற்றும் நிலையில்.. ஒருசாரார் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் இந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.
டிரம்ப் முதல்நாள் கையெழுத்து:
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்வில், குழந்தைகளை பாலியல் ரீதியாக மாற அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு பாலின சிகிச்சை செய்ய முடியும். திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றுவேன். விளையாட்டு போட்டிகளில் பாலின மாற்றம் செய்தவர்கள் கலந்து கொள்ள முடியாது.
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நடக்கும் பாலினம் தொடர்பான வகுப்புகளை தடுக்கவும் நான் முதல் நாளே முக்கியமான உத்தரவுகளில் கையெழுத்திடுவேன். ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்பேன். "ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்.
மூன்றாம் பாலினம்.. மற்ற மாற்று பாலினங்கள் இருக்க அனுமதிக்க மாட்டேன் என்று டிரம்ப் கூறினார். இதை தாண்டி சிலர் தங்களை விலங்குகள், பறவைகளாக அடையாளம் கண்டுகொள்ளவும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். அவர் தீவிரமான வலதுசாரி. அவரின் கொள்கையின்படி 2 பாலினம் மட்டுமே உள்ளது. இயற்கையில் இரண்டு பாலினம் மட்டுமே இருக்க முடியும்.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதை டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவரின் தீவிர வலதுசாரி கொள்கையின்படி இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது. மற்ற கொள்கைகள் எல்லாம் உண்மை கிடையாது. அது நோய் பாதிப்பு. அதை சரி செய்ய வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications