என்ன நடந்தாலும்.. வார்த்தையை மட்டும் விடாதீங்க.. ரேஷன் கடைகளுக்கு போன.. அதிர வைக்கும் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் புதிய எஸ்ஓபி அனுப்பப்பட்டு உள்ளது. அதாவது ரேஷன் ஊழியர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பான புதிய ஆலோசனை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு ஆகியவை மலிவான விலையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட.. தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் சிதிலம் அடைந்த பழைய ரேஷன் கடைகளை உடனே மூட வேண்டும். புதிய கடைகளை கட்ட வேண்டும். தற்காலிகமாக கிராம மண்டபங்களில் ரேஷன் கடைகள் இயங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி பழைய ரேஷன் கடைகளை உடனே புனரமைக்க வேண்டும் என்ற உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் புதிய எஸ்ஓபி அனுப்பப்பட்டு உள்ளது.
வார்த்தையை விட கூடாது: அதன்படி ரேஷன் பொருட்களை வாங்க வரும் நபர்களிடம் கோபமாக பேச கூடாது. குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் தன்மையாக பேச வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். தேவைற்ற சண்டைகளில் ஈடுபட கூடாது. பொருட்கள் இல்லாத பட்சத்தில் அதை மரியாதையாக சொல்ல வேண்டும்.
நியாயவிலை கடைகள் உள்ளே, வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். குப்பைகள் போடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளை சரியாக பூட்டிவிட்டு செல்ல வேண்டும். தரம் குறைந்த பொருட்களை உடனே திரும்பி வழங்க வேண்டும். தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்றுய் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்னொரு உத்தரவு: அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்சன் மேல் ஆக்சன்; மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.10.2023 முதல் 31.10.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ21,97,070/- (ரூபாய் இருபத்தொரு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எழுபது மட்டும்) மதிப்புள்ள 3474 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 289 எரிவாயு உருளைகள், 691 கிலோ கோதுமை, 230 கிலோ துவரம்பருப்பு, 660 லிட்டர் மண்ணெண்ணெய், 440 பாக்கெட் பாமாயில், சர்க்கரை 20 கிலோ ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 161 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட 842 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980- ன் கீழ் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications