சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. அவரை விடுங்கள்.. விஜயகாந்த் வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு

    சென்னை: திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது தவறு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பிரச்சனை இன்னும் முடியாமல் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழக பாஜக கட்சியின் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் தொடர்பாக செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக டிவிட் செய்தது. இதனால் வள்ளுவரை பாஜக அவமானப்படுத்திவிட்டது என்று பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. அதேபோல் திருவள்ளுவரின் சிலை திருவாரூரில் களங்கப்படுத்தப்பட்ட சம்பவமும் நடந்தது.

    என்ன கருத்து

    என்ன கருத்து

    இந்த நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது தவறு. அப்படி பொதுவாக இருக்கும் ஒருவரை வைத்து அரசியல் செய்வது நாகரீகம் அற்றது. அவரை விடுங்கள். இது போன்ற செயல்களை யாராக இருந்தாலும் கைவிட வேண்டும்.

    லாபம்

    லாபம்

    திருவள்ளுவரை வைத்து அரசியல் லாபம் பார்க்க வேண்டும் என்று யாரும் நினைக்க கூடாது. திருவள்ளுவரை குறித்து பேசுவதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அவர் அனைவருக்கும் பொதுவானவர்.

     சட்டம் ஒழுங்கு

    சட்டம் ஒழுங்கு

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடாமல் இருக்க முதல்வர் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்

    English summary
    Dont Politicize Thiruvalluvar says DMDK chief Vijayakanth on Thirukkural Controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X