18 கேமரா இருக்கு.. ஏன் மோடி நிகழ்ச்சியை லைவ் பண்ணலை.. சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்
சென்னை: 18 கேமராக்கள் இருக்கு.. ஆனால் ஏன் மோடியின் பேச்சை லைவ் செய்யவில்லை என்று கேட்டு தூர்தர்ஷன் பெண் அதிகாரி வசுமதியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னைக்கு வந்திருந்தார். ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது, "உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ் என்றும், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது.. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்றெல்லாம் பெருமை பட பேசினார்.
ஆனால் பிரதமரின் இந்த பேச்சை தூர்தர்ஷனில் நேரலை செய்யவில்லை என்று புகார் எழுந்தது. தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி ஆகும். அதனால், இதுகுறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குனர் வசுமதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரசார் பாரதி அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினர்.
அப்போது மோடியின் நிகழ்ச்சிகளை 18 கேமிராக்கள் மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டு, அதன்பிறகுதான் தூர்தர்ஷனில் டெலிகாஸ்ட் செய்தது தெரிய வந்தது. அதாவது பிரதமரின் பேச்சை லைவ் செய்யவில்லை. இது சம்பந்தமான உரிய பதிலையும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை. இதனால், உதவி இயக்குனர் வசுமதியை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்று செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications