Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலுவம்பாளையத்தில் "நிசப்தம்".. ஆழம் பார்க்கும் பாஜக.. திமுகவும் எடப்பாடியும்.. அப்ப ஓபிஎஸ் சேலஞ்ச்?

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக டீல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெருக்கடிகள் கூடி வருவதுடன், ஓபிஎஸ்ஸின் சவாலுக்கு பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் முக்கிய தகவல் ஒன்றும் கசிந்து வருகிறது.

4 நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஒரு சவால் விடுத்திருந்தார்.. முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா? என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார் .

எப்போதுமே மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருபவர் ஓபிஎஸ்.. டென்ஷனில் பலமுறை ஓபிஎஸ்ஸை மரியாதைக்குறைவாக எடப்பாடி பேசியதுண்டு.. பச்சோந்தி என்பது முதல் பல தடித்த வார்த்தைகளை உபயோகித்ததும் உண்டு.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

ஆனால், ஓபிஎஸ் அதற்கெல்லாம் ரியாக்ட் செய்வதில்லை.. மாறாக, எடப்பாடியை இதுவரை கண்ணியம் தவறிய வார்த்தைகளால் விமர்சித்ததும் கிடையாது.. முதல்முறையாக ஒரு நேரடி சவாலை எடப்பாடிக்கு விடுத்துள்ளார் ஓபிஎஸ்.. இதற்கு எடப்பாடியின் ரியாக்‌ஷன் என்னவென்று இதுவரை தெரியவில்லை.. ஆனால், தற்சமய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.. தீபாவளிக்காக சேலம் சென்றவர், அங்கேயே முகாமிட்டுள்ளார்.

சிலுவம்பாளையம்

சிலுவம்பாளையம்

எனினும், பெரிதாக யாரையுமே சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.. சிலுவம்பாளையத்தில் அமைதியாக, தனியாக ஒருசில நாட்களை கழிக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.. இதற்கு காரணம், ஓபிஎஸ் விடுத்த சவால்தான், மிகப்பெரிய குடைச்சலாக எடப்பாடிக்கு மாறியுள்ளதாம்.. தனிமையில் ஓய்வெடுக்க விரும்பினாலும், அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 சேலஞ்ச்

சேலஞ்ச்

இதனிடையே, ஒரு பிரபல சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் ஓபிஎஸ் விடுத்த சவாலுக்கு, எடப்பாடியின் மவுனம் குறித்து தன்னுடைய கருத்தையும் கூறியுள்ளார்.. லட்சுமணன் பேசும்போது, "ஓபிஎஸ் பக்கத்திலேயே உட்கார முடியாது என்கிறாரே எடப்பாடி, அப்படின்னா சட்டமன்றம் என்ன உங்க சொத்தா? அப்படி பார்த்தால் ஓபிஎஸ் இல்லையென்றால் நாலரை வருஷம் எடப்பாடி ஆட்சியே நடத்தியிருக்க முடியாதே.. ஆட்சி இருக்கும்வரை ஓபிஎஸ் வேண்டும் என்றால் எப்படி? இதுவரை சொல்லாத ஒரு வார்த்தை "துரோகி" என்று ஓபிஎஸ் சொல்லி உள்ளார்..

 நிரூபணம்

நிரூபணம்

ஓபிஎஸ்ஸும் மனிதர்தானே.. ஒருவேளை முதல்வருடன் நடக்காத சந்திப்பை பற்றி சொன்னதால், இயல்பான கோபத்தில் சொல்லி உள்ளார்.. ஓபிஎஸ்ஸுக்கு திமுக மறைமுகமாக உதவி செய்வதாக சொல்கிறார்கள்.. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? என்ன லாபம்? பொதுமக்களுக்கு இதனால் ஏதாவது துளியாவது லாபம் இருக்கா? அப்படியே இருந்தாலும், அதிமுககாரர்கள் அவரை ஒதுக்கி வைக்க போறாங்க.. ஸ்டாலினை உள்ளே சென்று சந்தித்ததாக சொன்னார்கள்.. அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுவதாக ஓபிஎஸ் சொன்னார்.. இதை சொல்லி இத்தனை நாள் ஆகிவிட்டதே, இதுவரை எடப்பாடி அதை நிரூபித்தாரா? பதில் வந்ததா?

 FIR + சார்ஜ் ஷீட்

FIR + சார்ஜ் ஷீட்

ஏன் மவுனமாக இருக்கிறார்? பொய் குற்றச்சாட்டு சொல்லி ஓபிஎஸ்ஸை அடக்க பார்க்கும் அளவுக்கு எடப்பாடியிடம் பதற்றம் இருக்கிறது.. ஆனால், எடப்பாடியையும், வேலுமணி, தங்கமணி இவர்களை மறைமுகமாக, காப்பாற்றுவதே திமுகதான்.. என்கிட்ட ஆதாரம் இருக்கு.. இன்னைக்கு வரைக்கும் உங்க யார் மேலயும் ஒரே ஒரு எப்ஐஆர்கூட போடாமல் இருக்கிறார்கள்.. சார்ஜ் ஷீட் ரெடியாகி 6 மாசமாச்சு.. ஆனால், இன்னும் ஃபைல் பண்ணல..

 பெரிய அபத்தம்

பெரிய அபத்தம்

ஊழலை ஒழிக்க வந்ததாக சொன்ன ஸ்டாலின் அரசு, ஏன் மவுனமாக இருக்கிறது? எவ்வளவு பெரிய அபத்தம் இது? யாரை காப்பாற்ற இந்த மவுனம்? இதையும் அதிமுககாரர்கள் ரசிக்க மாட்டார்கள்.. திமுகவுடன் யார் உறவு வைத்திருந்தாலும், அவர்களை தொண்டர்கள் கைவிட்டுவிடுவார்கள்.. பாஜக பொறுத்திருந்து செயல்படுவார்கள்.. யார் கை ஓங்கியிருக்கிறது என்று பார்க்கிறார்கள்.. கட்சி ரீதியாக எடப்பாடி பலமாக இருப்பதல், அவரை பாஜக கைவிடவில்லை.. ஓபிஎஸ்ஸையும் புறக்கணிக்கவில்லை.. எல்லாரும் ஒன்றாக இருந்தால் நல்லது என்று எச்.ராஜா மாதிரியான ஆட்களை விட்டு சொல்ல சொல்லி ஆழம் பார்க்கிறார்கள்.

 கிரேட் சைலண்ட்

கிரேட் சைலண்ட்

சசிகலா தினகரன், எடப்பாடி இவங்க எல்லாரும் ஒன்றாக இருந்திருந்தால், திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என்று எச்.ராஜா இதைத்தான் சொன்னார்.. இன்னும் டைம் இருக்கு, இருந்தாலும், ஒருங்கிணைந்த அதிமுகவை கருத்துக்களை பரவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. தாங்கள் கூட்டணி வைக்க போகும் கட்சி பலவீனமாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. எடப்பாடி பாஜகவை ஒதுக்குகிறார் என்றும் எடுத்து கொள்ள முடியாது.. அமித்ஷாவை ஓடோடி சென்று பார்த்தாரே.. எதுக்காக பார்த்தாரோ, அது வேற விஷயம்.. ஆனால், பாஜகவை எடப்பாடி ஒதுக்கிவிட்டார் என்ற முடிவுக்கு இப்போதே வர தேவையில்லை என்றார். ஆக மொத்தம், எடப்பாடிக்கு எதிரான நெருக்கடிகள் கூடி வருவதுடன், ஓபிஎஸ் சவாலுக்கு பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

க்ளீன் போல்டு

க்ளீன் போல்டு

இதனிடையே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளதையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து, அதிமுகவின் முழு அதிகாரம் விரைவில் தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் என, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, பசும்பொன்னுக்கு இந்த முறையும் எடப்பாடி செல்லாதது, அவருக்கு தென்மண்டலத்தில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+