உருளுது "சக்கரங்கள்".. அந்த பக்கம் 2 புயல் சுழற்சி.. இந்த பக்கம் 5 நாட்களுக்கு மழை.. கவனம் மக்களே
இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: சக்கரங்கள் சுழன்று வரப்போவதாக வெதர்மேன் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இன்னொரு அறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது... ஆனாலும் வழக்கமான மழை காணப்படவில்லை.. போதிய அளவு மழை பெய்யாத நிலையில், அவ்வப்போது பனியின் தாக்கமும் பெருமளவில் காணப்படுகிறது.
வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால், மழை குறைந்து விடும் என்பது இயல்பு.. ஆனால் இப்போது தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அடிக்கடி பெய்து வருகிறது.

சைக்கிள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பலமாக கொட்டியது.. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் வரும் 30ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், அதன்படி 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது... இனியும் மழை இருக்கும் என்கிறார்கள்..

ஹேப்பி நியூஸ்
நாளை வரை அதாவது 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.. மேலும், டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

நகருது சக்கரம்
அத்துடன், டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்றும் கூறியிருந்தது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனிடையே, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது... அதாவது, அரபிக் கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

சக்கரங்கள்
சென்னை வானிலை மையம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிக்கையில் டிசம்பர் 1 வரை மழை இருக்கும் என்றது.. பிறகு, நவம்பர் 30 வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அடுத்த 5 நாட்களுக்கும் மழை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது ஜில் செய்தியாக வந்துள்ளது... ஏற்கனவே, வெதர்மேன் சொன்னபடி, டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம் என்றும், சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்றும் வெதர்மன் தெரிவித்துள்ள எதிர்பார்ப்புகள் எகிறி வரும்நிலையில், 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமே அறித்துள்ளது, மழை பெய்யாத மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications