Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டபுள் "அட்வான்ஸ்" குட் நியூஸ் தமிழக அரசு ஊழியர்களுக்கு.. உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடி.. வந்தது அரசாணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார்.

அரசு ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமானது முன்பணத் திட்டமாகும்..

government employees udhayachandran ias advance

அந்தவகையில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள்

கடந்த 1989ம் ஆண்டு எடுத்துக் கொண்டால், அரசு ஊழியர்களின் மகன் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. பிறகு கடந்த 1995ல் இந்த தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், ''அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்'' என அறிவித்திருந்தார்.

அரசாணை வெளிவந்தது

அதன்படியே, அரசு ஊழியர்களின் திருமணத்திற்காக வழங்கப்படும் திருமண முன்பணத்தை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பணி ஓய்வு பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு, இந்த திருமண முன்பணம் கிடைக்கும்.

திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை விடுவிக்கப்படும். இது, 36 தவணைகளில் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்

திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்... கணவன், மனைவி, பெற்றோர் அரசு ஊழியர்களாக இருப்பின், ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.

திருமண முன்பண உயர்வு தேவை என்பது அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், அது உயர்த்தப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வருகிறது.. இந்த பணம் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு திருமணத்தின்போது கை கொடுத்து உதவுவதுடன், நிதிப்பாதுகாப்பையும் நிச்சயம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் குட்நியூஸ்

அதுமட்டுமல்ல, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் நடப்பு ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்..

அதன்படி, தொழிற்கல்வியில் சேர ரூ.1 லட்சம் என்ற அளவிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் படிப்புகளில் உயர் கல்வியில் சேர ரூ.50 ஆயிரம் என்ற அளவிலும் கல்வி முன்பணம் உயர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அந்தவகையில், 2 வகையான அரசாணைகளையும், உடனுக்குடன் அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+