சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் சட்டனெ குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை- கிளம்பியது விவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திடீரென செவ்வாய்க்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதாக அரசு தெரிவித்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

சென்னையில் 10 நாட்களாக தொடர்ந்து 1,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு என்பது 2,000-த்தை நெருங்கியது.

Doubts over Unusual decline in Chennai Coronvirus cases

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,515 தான் என தெரிவித்திருந்தது. அத்துடன் சென்னையில் 919 பேருக்குதான் கொரோனா எனவும் குறிப்பிட்டிருந்தது.

கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்

சென்னையில் மீண்டும் முழு லாக்டவுன் அமலாக்கப்படும் நிலையில் திடீரென கொரோனா பாதிப்பில் சரிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள பிரதீப் கவுர் தமது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Doubts over Unusual decline in Chennai Coronvirus cases

அதில், ஒவ்வொருநாளும் மேற்கொள்ளப்படுகிற சோதனைகளின் எண்ணிக்கை பற்றி தகவல்கள் இல்லாமல் சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி சரிந்தது? என்பதை விளக்குவது கடினம். மாநிலம் முழுவதும் தங்களது குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார் பிரதீப்

English summary
Many Doubts are raising over the Unusual decline in Chennai Coronvirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X