Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபேட்டி லிவர் இருந்தா "உயிர் கொல்லியான" சிர்ரோசிஸ் ஆப் லிவர் வரும் ! சிகிச்சை என்ன? டாக்டர் ஒய் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிரையே கொல்லும் சிர்ரோசிஸ் ஆப் லிவர் எனும் நோயை இயற்கையான முறையில் எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கிர்ரோசிஸ் ஆப் லிவர் (cirrhosis of liver) என்பது கல்லீரலில் வரக் கூடிய நோய். நம் கல்லீரலின் செயல்பாட்டுக்கான கடைசி ஸ்டேஜ்க்கான நோய் என்றும் சொல்லலாம். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயை கண்டுபிடித்துவிட்டால் சரி செய்துவிடலாம்.

ஆனால் முற்றி போன பிறகு இதை சீரமைக்க முடியாது. ஏனென்றால் கல்லீரலில் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த நோய் பாதிப்பை பார்ப்பதற்கு முன்னர் கல்லீரல் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். கல்லீரலை மிகப் பெரிய உறுப்பு என சொல்லலாம். 500 வேலைகளை செய்கிறது. அவையெல்லாம் சாதாரண பணி கிடையாது. முக்கியமானது,. உடலில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கக் கூடியது, நீரிழிவின் அளவை மெயின்டெயின் செய்யவும் பயன்படுகிறது. காயம் ஏற்பட்டால் ரத்தத்தை உறைய வைத்து ரத்த போக்கை நிறுத்துகிறது.

கல்லீரல்

கல்லீரல்

முதலில் கல்லீரல் என்ன செய்யும் என்றால் முதலில் ரத்தத்தை வடிக்கட்டும் , அதில் ஏதேனும் விஷத்தன்மை கொண்ட பொருள் இருந்தால் அதை வடிகட்டும். கல்லீரல் நமது உடலில் பித்த நீரை உற்பத்தி செய்யும். இந்த நீர் எதற்காக என்றால் கொழுப்புகளை ஜீரணம் செய்வதற்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. இப்படியான கல்லீரலில் தான் மது பழக்கத்தால் ஏற்படும் சிர்ரோசிஸ், மதுபழக்கமில்லாதோருக்கு ஏற்படும் சிர்ரோசிஸ் என இரு வகை உள்ளது. பொதுவாக இந்த நோய் மது பழக்கம் இருப்பவர்களுக்கு அதிகமாக வரும். அது போல் மது அருந்தாதவர்களுக்கும் இந்த நோய் வரும். அது எப்படி என்றால் மது அருந்தாதவர்களுக்கு தொடர்ந்து ஃபேட்டி லிவர் இருந்து கொண்டே இருத்தல், மஞ்சள் காமாலை வருவது உள்ளிட்டவையால் இந்த கிர்ரோசிஸ் ஆப் லிவர் வரும்.

சதைகளில் தழும்பு

சதைகளில் தழும்பு

இந்த நோய் வந்தால் நம் கல்லீரலில் உள்ள சதைகளில் தழும்பு போல் ஏற்படும். இந்த தழும்பு நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் கல்லீரலானது நிரந்தரமாகவே பழுதடைந்துவிட்டது என்பதே ஆகும். ஆரம்பத்தில் கல்லீரலின் செயல்பாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். நாளடைவில் கல்லீரலில் உள்ள செல்கள் இறந்துவிடும். பின்னர் அழற்சி ஏற்பட்டதும் இதை கடைசி ஸ்டேஜ் என்றே சொல்லலாம்.

கல்லீரலில் தழும்பு

கல்லீரலில் தழும்பு

கல்லீரலில் தழும்பு ஏற்பட்டால் அந்த இடத்திற்கு ரத்தஓட்டம் செல்லாது, உண்ணும் உணவிலிருந்து சத்துகள் செல்லாது. ஹார்மோன் உற்பத்தி இருக்காது. உடலில் அதிக கழிவுகள் ஏற்படும். நம் உடலில் உற்பத்தியாகும் புரதங்களின் அளவுகளை குறைத்துவிடும். இது உயிருக்கு உலை வைக்கும் நிலை என்றே சொல்லலாம். ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலமாக இந்த நோயை சரி செய்யலாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீண்ட கால மதுபழக்கம், நீரிழிவு நோய், உடல் பருமன், நிறைய மருந்துகள் ஊசிகளை எடுத்துக் கொள்பவர்கள், மஞ்சள் காமாலை உள்ளிட்டவை இருப்போருக்கு இந்த சிர்ரோசிஸ் நோய் எளிதாக வரும். இது புற்றுநோயா என கேட்டால் கிடையாது. சிர்ரோசிஸ் நோய் இருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கல்லீரலில் அதிக பாதிப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்னவென்றால் காய்ச்சல், சோர்வு, பசியின்மை, திடீரென எடை குறைதல், உடல் முழுக்க அரிப்பு ஏற்படுதல், கால் வீக்கம், வயிறு பகுதிகளில் வீக்கம், மலத்தின் நிறமும் மாறுதல், காயம் ஏற்பட்டாலும் ரத்தம் அதிகமாக வெளியேறும்.

கல்லீரல் ஸ்கேன்

கல்லீரல் ஸ்கேன்

இந்த அறிகுறிகள் இருந்தால் கல்லீரலை ஸ்கேன் செய்து பார்க்கும் போது நாம் நோய் பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு இந்த நோய் பாதிப்புடன் ஒருவர் வந்தார். அவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மண்ணீரல் வீக்கம், கல்லீரல் வீக்கம் ஆகியவை இருந்தது. இவருக்கு இரு வாரத்திற்கு அரும்பாக்கம் மருத்துவமனையில் புறநோயாளியாக அனுமதித்தோம்.

சிகிச்சை என்ன

சிகிச்சை என்ன

அவர் நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசியை எடுத்துக் கொண்டிருந்தார். நமது இயற்கையான சிகிச்சை மூலம் அவரை ஊசியிலிருந்து மாத்திரைக்கு மாற்றினோம். ரத்த அழுத்தத்தை குறைத்து அதற்கான மாத்திரையின் வீரியத்தை குறைத்தோம். இதையடுத்து சிர்ரோசிஸ் நோய் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அவருக்கு என்ன சிகிச்சைகள் கொடுத்தோம் என்றால், GH pack எனப்படும் Gastro Hepatic Pack கொடுத்தோம். இது நீரிழிவு நோயுடன் கல்லீரல் நோய் இருப்போருக்கு கொடுக்கப்படும் பேக் இது. இதை தினமும் கொடுத்தோம்.

 மண் குளியல்

மண் குளியல்

இடுப்பு குளியல், மண் குளியல் , வாழை இலை குளியல், மசாஜ், அக்குபஞ்சர் ஆகியவை கொடுக்கும்போது அவருடைய சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வந்தது. கால் வீக்கம், சோர்வு இவையெல்லாம் இரு வாரங்களில் குறைந்து கட்டுக்குள் வந்தது. அது போல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றாலும் அவர் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தியிருந்தோம்.

உஷார்

உஷார்

சிறுதானியங்களை அதிகமாக சேர்த்து கொள்ள கூறியிருந்தோம், கம்பு, கேழ்வரகு, குதிரைவால், வரகு, சாமை, உள்ளிட்டவைகளை எடுக்கச் சொல்லியிருந்தோம். தண்ணீரின் அளவு மூன்றரை லிட்டர் தினசரி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியிருந்தோம். கீழாநெல்லி கீரையை எடுத்துக் கொள்ள சொன்னோம். இது போல் இயற்கையான உணவுகளை எடுத்து கொண்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கல்லீரலில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. மண்ணீரலில் வீக்கமும் இல்லாமல் இருந்தது. எனவே ஆரம்ப காலத்தில் கல்லீரல் நோயை கண்டறிந்து சிகிச்சை பெற்று கொள்ளுங்கள். இவ்வாறு டாக்டர் ஒய் தீபா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+