இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? யூரினை எறும்பு மொய்க்கிறதா? டெஸ்ட் எடுங்க.. டாக்டர் பரூக்
சென்னை: இரவு உறக்கத்தில் வழக்கத்துக்கு மாறாக சிலமுறை சிறுநீர் கழிக்க எழுவது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இரவு உறக்கத்தில் வழக்கத்துக்கு மாறாக சிலமுறை சிறுநீர் கழிக்க எழுதல். பசி அதிகம் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருத்தல் . அவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்காமல் இருத்தல்.
டயட் எதிலும் இல்லாமலும் உடல் பயிற்சி எதுவும் செய்யாமலும் திடீரென்று எடை குறைய ஆரம்பிப்பது, சிறுநீர் கழித்த இடத்தில் வாசனை வருவது. எறும்பு மொய்ப்பது. நுரை நுரையாக சிறுநீர் வெளியேறுவது பாதங்கள் இரண்டிலும் எரிச்சல்/ மதமதப்பு தோன்றுதல்
பிறப்புறுப்பில் புண் அடிக்கடி தோன்றுவது.

வெடிப்பும் புண்ணும்
ஆண்களுக்கு முன்தோல் வெடிப்பும் புண்ணும் பெண்களுக்கு பிறப்புறுப்பைச் சுற்றி அரிப்பும் புண்களும் தோன்றுவது மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றுமாயின் எந்த வயதினராயினும் சரி... உடனே தாமதிக்காமல் காலை வெறும் வயிற்றிலும் உணவு சாப்பிட்ட இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை பரிசோதனை செய்யவ வேண்டும்.

ரத்த சராசரி
அத்துடன் கூடவே HbA1c எனும் மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள். காலை வெறும் வயிற்றில் க்ளூகோஸ் 100mg/dl க்கு மேல் 125க்குள் உணவுக்குப் பின் 140mg/dl க்கு மேல் 200க்குள் இருந்தால் Hba1c 5.6 முதல் 6.5 இருந்தால் உடலில் அனா ஆவன்னா எழுதியிருப்பது டயாபடிஸ் என்றறிக. இதை Prediabetes உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.

வெறும் வயிறு
வெறும் வயிற்றில் 126mg/dl க்கு மேல் இருந்தால் இரண்டு மணி நேர சர்க்கரை 200mg/dl க்கு மேல் HbA1c 6.5 க்கு மேல் என்றால் நீரிழிவு நம் உடலில் தனது சுயசரிதையை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். உடனடி வாழ்வியல் மாற்றங்களுடன் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகளும் தேவைப்படும்.

கட்டாய மருத்துவம் கண்காணிப்பு
கட்டாயம் மருத்துவ நிபுணரிடம் முறையான கண்காணிப்பும் அவசியம். மூடநம்பிக்கைகள் கொண்டு வதந்திகளை நம்பிக் கொண்டிருந்தால் நன்மை நேராது. நீரிழிவு நோயர்கள் அனைவரையும் மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறைக்கு அழைக்கிறேன் . நிச்சயம் நாவைக் கட்டுப்படுத்தினால் நீரிழிவையும் கட்டுப்படுத்திட முடியும். இவ்வாறு பரூக் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications