Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்ட 13 வயது ஊட்டி சிறுமி பலி! நடந்தது என்ன? டாக்டர் பரூக் விளக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவி பலி ஏன்- டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட சிறுமி பலியானது ஏன் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரும்புச்சத்து மாத்திரைகளை
"யார் அதிகம் உண்பது?" என்று போட்டியில் 13 வயது மாணவி ஒருவர் மிக அதிகமான அளவில் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொண்டு அதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும்.

தேசிய சுகாதார இயக்கம்

தேசிய சுகாதார இயக்கம்

நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு திட்டமாக "வாரம் தோறும் ஒரு நாள் - ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் ஆண் பெண் இருபாலருக்கும் ஒரு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கிய மாத்திரையை வழங்கும் திட்டம்" 2014 ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை - மதிய உணவுக்குப் பின் ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் ஒரு மாத்திரையை மாணவ மாணவியர் உட்கொண்டு அனீமியா எனும் ரத்த சோகை ஏற்படாமல் தங்களைக் காத்துக் கொள்வர்.

அரசு பள்ளி

அரசு பள்ளி

அரசு பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு அதைக் களையும் வண்ணம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டம் இது. ரத்த சோகை நோயின் தாக்கத்தால் மாணவ மாணவிகளின் கல்வித் திறன் குறைவதும், சோர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் போகிறது. அதீத ரத்த சோகை இதயத்தின் இயங்கு திறனையும் நாளடைவில் பாதிக்கிறது. மூளை செயல்படும் திறனையும் குறைக்கிறது.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

இதற்காக இந்தத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திலும் இந்த இரும்புச் சத்து மாத்திரைகளிலும் குறையில்லை. மாறாக மனிதத் தவறுகளும் மனித அலட்சியங்களும் விழிப்புணர்வு இன்மையே இது போன்ற விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த நிகழ்வைப் பொருத்தவரை வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ மாணவிகள் கையில் அளவுக்கு மீறிய சத்து மாத்திரைகள் கிடைத்துள்ளன.

வாரந்தோறும் ஒரு மாத்திரை

வாரந்தோறும் ஒரு மாத்திரை

வாரந்தோறும் ஒரு மாத்திரை மட்டுமே அவர்களுக்கு ஆசிரியரிடம் இருந்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தனை மாத்திரைகள் அவர்கள் கையில் கிடைத்தது எனும் போது அங்கு மாத்திரைகளை பராமரிக்க வேண்டியவர்களின் அலட்சியம் தெரிகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாட்டின் ஏனைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் இனித் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

இதற்கடுத்த படியாக மாத்திரைகள் அது சத்து மாத்திரையாக இருந்தாலும் சரி எந்த மருந்தாக இருந்தாலும் சரி அவற்றை அளவுக்கு அதிகமாக தேவைக்கும் அதிகமாக உண்ணும் போது உடலில் அது நஞ்சாக மாறி உயிரைக் கொல்லும் எனும் அறிவை விழிப்புணர்வை வளர் இளம் பருவத்து மாணவ மாணவிகளுக்கு விதைக்க வேண்டும். வளர் இளம் பருவம் என்பது அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கத் துடிக்கும் பருவம் இளம் கன்று பயம் அறியாது தீ சுடும் என்று முன் கூட்டியே கூறினால் அவர்கள் அதைத் தீண்ட யோசிப்பார்கள்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


அவர்களுக்கு வழங்க வேண்டிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். இதே போன்று 2021இன் இறுதியில் கள்ளக்குறிச்சியில் தாய்க்கு வழங்கப்பட்ட இரும்புச் சத்து மாத்திரைகளில் நான்கு ஐந்தை ஒன்றரை வயது குழந்தை விழுங்கிவிட உடனடியாக எழும்பூர் அரசு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் அட்மிஷன் பெற்று டெஸ்ஃபெரியாக்சமின் எனும் இரும்புச்சத்து நச்சுத்தன்மைக்கு மாற்று மருந்து வழங்கப்பட்டு குழந்தை பிழைத்தது.

மாணவ மாணவிகள்

மாணவ மாணவிகள்

இந்த நிகழ்வுகள் வழி நாம் அறிந்து கொள்ள வேண்டியவை
- நம் குழந்தைகளுக்கு மாணவ மாணவிகளுக்கு மருந்தின் குணம் குறித்தும் , எந்த மருந்தையும் அளவுக்கு மீறி உட்கொண்டால் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து எனும் விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
- தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அரசின் சுகாதாரம் சார்ந்த திட்டங்களில் வழங்கப்படும் மாத்திரைகளில் தனிக்கவனம் செலுத்தி மாத்திரைகளை பூட்டுப்போட்டு தாழிடப்பட்ட அறைகளில் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இந்தத் திட்டத்தின் நன்மை குறித்தும் , "எந்த சத்து மாத்திரையும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து" என்பதையும் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் உடல் நலனையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யும் பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவக் குழு இது குறித்து மேலதிகமான விபரங்களுடன் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

வாரந்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கி ரத்த சோகையை சரிசெய்யும் அரசின் திட்டம் சிறப்பானது அரசு வழங்கும் இரும்புச்சத்து மாத்திரைகள் பாதுகாப்பானவை. அவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உண்டதால் வந்த தீய விளைவு இது. எனவே மாத்திரைகள் குறித்து அச்சமோ ஐயமோ கொள்ளத் தேவையில்லை. கவனமும் அலட்சியமின்மையும் விழிப்புணர்வும் நம்மைக் காக்கும் கேடயங்கள். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+