Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழிப்பறையில் கஷ்டப்பட்டு முக்கினால்தான் மலம் வருதா?.. கவலையை விடுங்க.. டாக்டர் கவுதமன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலச்சிக்கலில் இருந்து நிரந்தரமாக விடுபட 3 விஷயங்களை ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கவுதமன் கூறுகிறார்.

Recommended Video

    மலச்சிக்கலில் இருந்து நிரந்தரமாக விடுபட 3 விஷயங்கள்.. ஆயுர்வேத மருத்துவர் Dr கவுதமன் கூறும் அட்வைஸ்

    இதுகுறித்து ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் கூறுகையில், இன்று நாம் முக்கியமாக பார்க்கக் கூடிய டாப்பிக் மலச்சிக்கல். அதைப் பற்றி ஒரு புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். 5 வகையான மலச்சிக்கல்கள் உள்ளன.

    ஒன்று ஒரு நாளைக்கு ஒரு முறை சிரமப்பட்டு மலம் கழிப்பது. இரண்டாவது, 2 நாளைக்கு ஒரு முறை மலம் கழித்தல், மூன்றாவது குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும்போது மட்டும் ஏற்படுகிற மலச்சிக்கல்.

    சப்பாத்தி

    சப்பாத்தி

    உதாரணத்திற்கு ஒரு அசைவம் சாப்பிடுகிறோம். சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் மலம் கட்டி விடுவதாக கூறுவார்கள். நான்காவது, ஏதோ உடல்நலனுக்காக எடுக்கக் கூடிய மாத்திரைகளால் மலச்சிக்கல் ஏற்படுவது. 5ஆவது மலம் உடலை விட்டு முழுமையாக கழிந்தாலும் மனதளவில் மலம் வருவது போல் நினைத்து கொண்டு மலச்சிக்கலே இல்லாவிட்டாலும் அது இருப்பது போல் நினைப்பது.

    4 வகை மலச்சிக்கல்கள்

    4 வகை மலச்சிக்கல்கள்

    முதல் 4 வகை மலச்சிக்கல்களை பொதுவாக நாம் பார்க்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதல் இரண்டு மலச்சிக்கல்களுடன் இருப்பது. எனவே இந்த 4 வகை மலச்சிக்கல்கள்தான் நோய். இந்த 5ஆவது வகை மலச்சிக்கல் என்பது நோய் கிடையாது.

    மாத்திரை

    மாத்திரை

    காலையில் எழுந்து 8 மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பும் போது வயிற்றை கலக்குவது போல் தோன்றும். உடனே கழிப்பறைக்கு செல்கிறோம். திருப்பி வரும், காப்பி சாப்பிடும் போது திருப்பி கலக்குவது போல் இருக்கும். உடனே இவர்கள் மருத்துவரிடம் போய் சார் எனக்கு அடிக்கடி மலம் கழிப்பது போல் இருக்கிறது என கூறுவார். உடனே டாக்டரும் ஒரு மாத்திரையை எழுதி தருவார்.

    மலமே கழிக்காத சூழல்

    மலமே கழிக்காத சூழல்

    அதை சாப்பிட்டவுடன் சுத்தமாக மலமே கழிக்க முடியாத நிலை ஏற்படும். முதல் வகை மலச்சிக்கல் யாருக்கெல்லாம் வரும் என பார்த்தோமேயானால் அது வாதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும். ஒன்றிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் 20 வயது முதல் 50 வயது வரை அலுவலகத்திற்கு செல்லக் கூடிய ஆண்களையும் பார்க்கும் போது 100-இல் 90 பேருக்கு இது போன்றதொரு விஷயம் ஏற்படுகிறது.

    இரு நாட்கள்

    இரு நாட்கள்

    இரண்டாவது மலச்சிக்கல் என்பது இரு நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் கழிப்பார்கள். அவர்களை பொருத்தமட்டில் அது சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. 12 மணி நேரத்திற்கு ஒரு முறை உடல் கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகிறது என்பது முறையான மலச்சிக்கலற்ற ஒரு வாழ்க்கை ஆகும்.

    இரவு 8 மணிக்கு

    இரவு 8 மணிக்கு

    காலை 6 மணிக்கு ஒரு முறை, இரவு 8 மணிக்கு ஒரு முறை என உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறினால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உணவு முறை மலச்சிக்கலை பொருத்தவரை பிரச்சினையே இல்லை. உணவை மட்டும் மாற்றினால் போதும். தண்ணீரை அதிகமாக குடித்தாலே போதும். இதற்கு மிகப் பெரிய மருந்துகள் தேவையில்லை.

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல்

    மருந்துகளை சாப்பிடும் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை மருத்துவர்களிடம் கூறினால் அவர்களே அதற்கு தீர்வும் கொடுப்பர். மலச்சிக்கலற்ற வாழ்க்கை என்பது மிகப் பெரிய வரம் ஆகும். மலச்சிக்கல் நீங்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். காலையில் எழுந்தவுடன் சிறுநீராக இருந்தாலும் சரி, மலமாக இருந்தாலும் சரி அதை முறையாக எப்படி வெளியேற்றுவது என்பது ஒரு கேள்வி.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி

    இதற்கு மூன்று வகையாக நீங்கள் செய்யலாம். ஒன்று உடற்பயிற்சி. 2. உணவு முறைகளில் மாற்றம். 3. மலமிளக்கிகளை இயற்கையாக உண்ணுவது. உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். காலையில் 5.30 மணிக்கு எழுந்து ஒரு லிட்டர் அளவுக்கு இளம் சூடான நீரை குடிக்கலாம். ஒரு சிட்டிகை ஜீரகம், ஒரு சிட்டிகை சுக்கு, ஒரு சிட்டிகை தனியா போட்டு நன்றாக கொதிக்க வைத்து சாப்பிடலாம்.

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல்

    அந்த தண்ணீரை இளம் சூடான தண்ணீராக காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும். குறைந்தது 30 நிமிடங்கள் நடந்தாலே போதும். மலச்சிக்கலை நீக்குவதற்கென்றே நிறைய உடல்பயிற்சிகள் இருக்கின்றன. அதையும் நாம் தாராளமாக செய்யலாம். உணவை கொண்டு மலச்கிக்கலை சரி செய்வது எப்படி என பார்ப்போம்.

    கடுக்காய்

    கடுக்காய்

    வாழைப்பழம், பப்பாளி பழம், ஆப்பிள், ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, லெமன் சாறு, சப்போட்டா பழங்கள், மாம்பழம், பலாப்பழம் ஆகிய நார் சத்து அதிகம் உள்ள பழங்களை சர்க்கரை நோய் அற்றவர்கள் ஒரு நாளைக்கு 75 கிராம் எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் முழுமையாக தீர்ந்து போயிருப்பதை நாம் பார்க்கலாம். மலமிளக்கி என வரும்போது திரிபலா சூரணமும், கடுக்காயையும் சிலர் சாப்பிடுகிறார்கள்.

    ஆயுர்வேத மருந்து

    ஆயுர்வேத மருந்து

    அது நேரடியாக சாப்பிடும்போது குடல் வறட்சி தன்மை ஏற்படும். நார்சத்து உணவிலிருந்து தயாரிக்கக் கூடிய ஒரு மலமிளக்கியை நாம் சாப்பிடலாம். தினமும் 4 ப்ரூன் பழங்களை சாப்பிட்டால் போதும், மறுநாள் காலையில் நல்ல மலமிளக்கியாக செயல்படும். பக்க விளைவுகள் ஏற்படாத மலமிளக்கி எதுவென்றால் சஜோலேக்ஸ். இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும்.

    மலமிளக்கி

    மலமிளக்கி

    இந்த மருந்தை 5 கிராம் அல்லது அரை தேக்கரண்டி எடுத்து ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும். காலையில் மலம் ஒரு சிறு தடங்கல் கூட இல்லாத அளவுக்கு வெளியேறும். எனவே மலச்சிக்கல் என வரும் போது சூடான நீரில் சுக்கு, சீரகம், தனியா போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அடுத்தது உணவில் இருக்கக் கூடிய மாற்றங்களை செய்யலாம். அடுத்து சஜோலேக்ஸ் எனப்படும் மலமிளக்கியை சாப்பிடுவது என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+