பாஜக ஏமாற்றிவிட்டது? கிருஷ்ணசாமி ஆவேசம்! அடுத்து திமுகவா?
சென்னை: பாஜக அரசு தேவேந்திரகுல வேளாளர் மக்களை ஏமாற்றி விட்டது என்று வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வந்தது புதிய தமிழகம் கட்சி. அதைத் தாண்டி தமிழ்நாட்டில் மோடியின் ஆதரவாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி.

மற்ற கூட்டணி கட்சிகளைவிடவும் அதிகம் மோடியை ஆதரித்ததால், அதிக விமர்சனங்களை இவர் சம்பாதித்தார்.
மக்களவைத் தேர்தல் 2024 விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்டக் குழு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வழங்கி உள்ளது.
கிட்டத்தட்ட 7 மணிநேரம் கட்சியின் உயர்மட்ட குழு விவாதம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பலரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் மோடியின் ஆதரவு குரலாக ஒலித்து வந்த டாக்டர் கிருஷ்ணசாமி இப்போது பாஜக அரசு தேவேந்திரகுல வேளாளர் மக்களை ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளார்.
இது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான அறிகுறியா? அல்லது அதிக சீட்டுகளைப் பெறுவதற்கான முயற்சியா? எனச் சந்தேகம் அரசியல் வட்டத்தில் கேட்கத் தொடங்கி உள்ளது.

பலரும் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் அதிமுக கூட்டணிக்குள் சென்று விடும் என சில வாரங்கள் முன்னதாகவே பேசிவந்தனர். அப்படியான ஒரு சூழ்நிலையில் ஊகித்ததைப் போலவே பேசி உள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
மேலும், திமுக கூட்டணிக்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, 'அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். அது எங்கள் கட்சிக்கும் பொருந்தும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
அப்படிப் பார்த்தால் திமுக கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
உண்மையில் பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் நீடிக்குமா? இல்லையா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார்?

"எங்கள் கட்சி நாடாளுமன்றத்திற்குள் நிச்சயம் சென்றே ஆகவேண்டும். நாங்கள் 1997இல் கட்சியைப் பதிவு செய்தோம். 1998இல் இருந்து அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் பங்குபெற்று வருகிறோம்.
சட்டமன்றத்தில் எங்களது பிரதிநிதித்துவம் இருந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களின் பிரதிநிதித்துவம் இதுவரை இல்லை. ஆகவே, இந்தத் தேர்தல் எங்களைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானதாகக் கருதுகிறோம்.
ஆகவே, ஒரு வலுவான வெற்றிக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஏழு சமூகத்தினரை உள்ளடக்கி, தேவேந்திரகுல வேளாளர்கள் என வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். இது ஏறக்குறைய 100 ஆண்டுகால கோரிக்கை.

இதைச் செய்ய வேண்டிய இடத்தில் உள்ள மத்திய அரசு வெறும் பெயர் மாற்றம் செய்ததோடு நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்கள் சமுதாயத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எங்கள் சமூக மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகிவிட்டனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக செய்யவில்லை. செய்யக் கூடிய இடத்திலிருந்தும் அவர்கள் அதைச் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்கள்.
எங்கள் கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 30 லட்சம் வாக்குகள் உள்ளன. ஆகவே, எங்கள் ஆதரவு என்பது கூட்டணிக் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து வெற்றியை மனதில் கொண்டு வலுவான கூட்டணியில் சேர உள்ளோம்.
கடந்த தேர்தல்களில் அவசரமாக சில முடிவுகளை எடுத்துவிட்டோம். இந்த முறை ஆழ யோசித்து முடிவு எடுக்க உள்ளோம். ஆகவே, கூட்டணி குறித்துப் பல தரப்புடன் பேச்சுகள் நடந்து வருகின்றன. பாஜகவின் தேசிய தலைவர்களின் ஒருவரான அமித்ஷா கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளன என்று சொல்லி இருக்கிறார்.

அதன் அர்த்தம் என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள அதிமுக உள்ளே வர வேண்டும் என்பதே பொருள். அதிமுக பாஜகவுடன் வருமா என்று நான் சொல்ல முடியாது. அவர்கள் சேரவே மாட்டார்கள் என்றும் நான் சொல்ல முடியாது. பாஜக கூட்டணிக்காகக் காத்திருக்கிறது என்பது உறுதி.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே நாங்கள் அந்தக் கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா என்று எப்படிச் சொல்வது? அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய அதிமுகவே வெளியே சென்று விட்டது.
பல்லடம் பகுதிக்கு வர உள்ள பிரதமர் மோடியைக் கூட்டணி குறித்து பேசத் தனியே சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் போவோம். பத்தோடு பதினொன்றாக சந்திக்க அழைத்தால் செல்ல வாய்ப்பு இல்லை" என்கிறார்
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications