மோடி ஆட்சிக்கு முட்டை மார்க்! வைரலாகும் டாக்டர் ராமதாஸ் வீடியோ!
சென்னை: டாக்டர் ராமதாஸ் பேசி இருந்த பழைய வீடியோ ஒன்று இப்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2014 முதல் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இருந்து வருகிறது. அந்தக் கூட்டணி இந்த 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியிலும் தொடர்ந்து உள்ளது.

பாஜகவின் கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
'மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும். நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதாக’ டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசி இருந்தார்.
ஆனால், பாமக - பாஜக பொருந்தாத கூட்டணி என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதற்குச் சான்றாக டாக்டர் ராமதாஸ் கொடுத்த பழைய பேட்டிக்கான வீடியோ பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
அந்தப் பேட்டியில் மோடி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்று நெறியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு டாக்டர் ராமதாஸ், “சைபருக்கும் கீழ ஏதாவது மார்க் உள்ளதா என நான் தேடுகிறேன். அப்படி ஒரு மார்க் இருந்தால் அதையே மோடி ஆட்சிக்குக் கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு மாறாக இப்போது அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி 1989 ஜூலை 16 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியின் துவக்க விழாவுக்காக மெரினாவில் ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் அன்றைக்குக் கூடினர். இரவு 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்குத்தான் பேசினார் டாக்டர் ராமதாஸ். அந்தளவுக்குப் பல தலைவர்கள் விடிய விடியப் பேசினார்கள். கூட்டம் கலையாமல் கட்டுக்கோப்பாக இருந்தது.
அதற்குக் காரணம், அந்தக் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வேண்டி நடத்திய சாலை மறியல் போராட்டம். வட தமிழகம் முழுக்க முடங்கியது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பலியாகினர்.
அதன்பின்னர் பாமக உதயமானது. அந்தக் கட்சி முக்கியமான சில கொள்கைகளை முன்வைத்து. அதாவது கட்சியின் தலைவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
கட்சியின் பொதுச்செயலாளர் தலித் ஆக இருக்க வேண்டும். பொருளாளர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்தக் கொள்கைகள் மக்களை ஈர்த்தன. பாமக வலுவாகக் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவும் திமுகவும் பாமக தங்களின் கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என நம்பின.
ஒரு கட்டத்திற்குப் பிறகு திராவிட கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார் ராமதாஸ். திமுக கூட்டணியில் இருக்கும் போதே கருணாநிதியின் ஆட்சியை விமர்சித்தார்.
அப்படி பாமகவின் முக்கியமான போராட்டமாகப் பார்க்கப்பட்ட இடஒதுக்கீட்டு போராட்டத்தைப் பற்றி சில வருடங்கள் முன்பு அன்றைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்தார். அதற்கு எதிராக ராமதாஸ் அறிக்கை விட்டார். பிரச்சினை தீவிரமானது.

ஆனால் இன்றைக்கு அதே தமிழிசை செளந்தரராஜன் பாஜகவுக்குத் திரும்பி உள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தக் கூட்டணிக்குள் பாமக சென்றுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டாக்டர் ராமதாஸ் அளித்திருந்த பேட்டியில், 2014இல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாகக் கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அவர், “நான் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த போது போய் சந்திக்கவே இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நான் சொல்லவில்லை. அந்த நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய ஒரு நிலைமை வந்தது. ஆகவே கூட்டணி வைத்தோம்.
திமுக அதிமுக இல்லாத ஒரு அணி வேண்டும் எனப் பல காலமாகச் சொல்லி வருகிறோம். ஆகவே பாஜக பக்கம் சென்றோம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஏதாவது செய்யும் என நினைத்தோம். ஆனால், கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் (அதாவது 2014 -18) பாஜக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. மக்களுடைய எண்ணம் அதுதான். என்னுடைய எண்ணமும் அதுதான்” என்று கூறியுள்ளார்.
இதே பேட்டியில் அமித்ஷா சென்னை வந்தபோது 'தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என்கிறார்கள்? இந்தக் கூட்டத்தைப் பாடுங்கள். இதுதான் பாஜக’ என்று பேசி இருந்தார். அதற்கு டாக்டர் ராமதாஸ், “ஒரு கோடி ரூபாய் ஒருவரிடம் இருந்தால் கூட்டத்தை யாரும் கூட்டி விடலாம்’ என்று கிண்டலடித்திருந்தார்.
இந்தப் பேட்டிதான் தற்போது வைரலாகி வருகிறது.
-
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!











Click it and Unblock the Notifications