"என்னவோ.. என்னமோ நடக்குது".. தமிழக கூட்டாளிக்கு கற்று தருகிறாரோ.. திமுக, பிகேவை கலாய்த்த ராமதாஸ்!

பிரசாந்த் கிஷோர் - திமுகவை விமர்சித்து ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ட்வீ ட் போட்டு திமுகவும், பிரசாந்த கிஷோரையும் டோட்டலாக டேமேஜ் செய்துவிட்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. "என்னவோ நடக்குது... ஒன்னுமே புரியலை" என்ற இந்த ட்வீட்தான் படு வைரலாகி வருகிறது.

Recommended Video

    DMK should go alone in 2021 election - Prashant Kishor advice for DMK

    அதிமுகவுக்காக வியூகம், மக்கள் நீதி மய்யத்துக்கான வியூகம் என்றெல்லாம் அடங்கி இப்போது திமுகவுக்கான வியூகம் மட்டுமே பிரசாந்த் கிஷோருக்கு உறுதியாகி உள்ளது.

    இந்த உறுதியான தகவல் வெளிவந்தபிறகுதான் அரசியல் களம் சூடானதுடன், பல்வேறு பரபரப்பு கருத்துக்களும் வெளியாகி வருகின்றன.. திமுகவிலேயே இந்த பரபரப்பு அதிகமாக உள்ளது.. பலர் அதிருப்தியில் உள்ளதாக கூட சொல்லப்படுகிறது... காரணம் அவர்கள் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை மட்டுமல்ல, திராவிட வேரில் ஊறித் திளைத்த கழகத்துக்கு பிரசாந்த் கிஷோரின் சாயல் தேவைதானா என்பதுதான் கேள்வியே!

    அரசியல் ஆலோசனை

    அரசியல் ஆலோசனை

    இந்நிலையில், திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர் பீகாரின் மோதிகாரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்... அந்த புகாரில் பாத் பீகார் கி என்ற பெயரிலான தன்னுடைய கருத்தை பிரசாந்த் கிஷோர், திருடி பயன்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இயக்கம்

    இயக்கம்

    இந்த புகாரின்பேரில், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் பிரசாந்த் கிஷோர் மீது 420 மற்றும் 406 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவதற்காக பிரசாந்த் கிஷோர் நடத்திவரும் இயக்கமாகும்... தற்போது பிரசாந்த் கிஷோர் திமுகவின் அரசியல் ஆலோசகராக இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு, பல்வேறு மாநிலங்களில் வியூகம் அமைத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர்.. ஒரு இடத்தில் அமைக்கப்படும் வியூகம், இன்னொரு மாநிலத்தில் இதுவரை பயன்படுத்தியது இல்லை, அதனால்தான் இவரை எல்லா தரப்பு அரசியல் கட்சி தலைவர்களுமே முழுசாக நம்பினார்கள். இந்நிலையில், இப்படி ஒரு புகார் வந்துள்ளது.

    ராமதாஸ்

    இந்த புகாரை வைத்துதான் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்... இவர் பிரஷாந்த் கிஷோரைக் குறித்து டிவீட் போடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை உரைநடை பாணியில் பிரசாந்த் கிஷோரை விமர்சித்து பதிவுகளை அடுத்தடுத்து போட்டிருந்தார் டாக்டர்.. அதில், அண்ணே... எங்கண்ணே போறீங்க?'' '' அட... அது ஒன்னும் இல்லப்பா.... இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்'' என பதிவிட்டிருந்தார்.

    உரையாடல்

    உரையாடல்

    அந்த உரையாடலின் தொடர்ச்சியாக...'' அண்ணே.... பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?'' '' இல்லப்பா.... அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்'' என்று நக்கலடித்திருந்தார். இந்த நிலையில் இப்போது ஒரு டிவீட் போட்டு கிண்டலடித்துள்ளார்.

    ஒன்னுமே புரியலை

    ஒன்னுமே புரியலை


    நேற்று போட்ட ட்வீட்டில், "பிகாரில் நல்லாட்சி வழங்குவதற்கான தமது கருத்துருவை பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக புகார். வழக்குப் பதிவு : செய்தி - சரி தான்.பிரசாந்த் கிஷோர் தமிழக கூட்டாளிக்கு கற்றுத் தருகிறாரா...தமிழக கூட்டாளியிடம் கற்றுக் கொள்கிறாரா? என்பதே தெரியவில்லையே? என்னவோ நடக்குது... ஒன்னுமே புரியலை" என பதிவிட்டுள்ளார்.

    ஒரே ட்வீட்டில் திமுகவையும், பிரசாந்த் கிஷோரையும் தாக்கி போட்ட டாக்டர் ஐயாவின் இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+