பேசாம நம்ம வேலையை பார்க்கலாம் வாங்க.. ராமதாஸ் தெம்பு டிவீட்
கடின உழைப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பூடகமான விஷயங்கள், எதிர்மறை விமர்சனங்கள், தாக்கி பேசுவது, வாழ்த்தி பேசுவது, என எல்லாவற்றையும் இவ்வளவு நாள் முடித்துவிட்டு டாக்டர் ராமதாஸ் இப்போது, "பேசாம நம்ம வேலையை பாக்கலாம்.. வாருங்கள்" என்று தெம்புடன் ஒரு உற்சாக ட்வீட் போட்டுள்ளார்.
கூட்டணி சமாச்சாரம் முடிந்து 7+1 வாங்கியதில் இருந்தே ராமதாசின் ட்வீட் படுவித்தியாசமாக இருக்கிறது. முன்பு போல் ட்வீட்டில் எந்த குழப்பமும் இருப்பதில்லை, யாரையும் தாக்குவதில்லை, யாருக்கும் சரமாரியான பதிலடிகளை தருவதில்லை.

செம குஷியில் டாக்டர் இருப்பதுடன் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், அவர் சொல்லி இருப்பதாவது:
"நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். கடுமையாக உழையுங்கள்-நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான, உண்மையான, நட்பான மனிதர்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்! -டினா தேசாய்" என்று பதிவிட்டுள்ளார்.
நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். கடுமையாக உழையுங்கள்-நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்.உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான, உண்மையான, நட்பான மனிதர்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 25, 2019
-டினா தேசாய்
விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள் என்று ராமதாஸ் சொன்னது நல்ல விஷயம்தான் என்றாலும், யாரை, எதற்காக சொல்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் இவ்வளவு காலம் இல்லாமல் இந்த முறை மட்டும் கூட்டணி முடிந்த நாளிலிருந்தே இப்படி விமர்சனங்கள் ஏன் வருகின்றன என்பதை அக்கட்சி தலைமை ஆராயுமா என்பதுதான் தெரியவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications