இதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி
காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது
Recommended Video
சென்னை: "நான் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை காடுவெட்டி குரு" என்று அடிக்கடி பெருமைபட சொல்லும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. குருவின் நினைவு மண்டபத்துக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்!
டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்.. தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் குரு.

பாமக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சரி, அந்த கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி போன்றோர் பங்கேற்றிருந்தாலும் சரி, அவர்களின் பேச்சுகளைவிட குருவின் பேச்சுக்கு கைதட்டல்களும், ஆரவாரங்களும் பெருகும். அப்படிப்பட்டவர் கடந்த மே மாதம் உயிரிழந்தது பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
பாட்டாளி சொந்தங்களே.....
— Dr S RAMADOSS (@drramadoss) September 16, 2019
நெஞ்சில் நிறைந்தவனுக்கு
நினைவு மண்டபம் திறப்பு:
இதயத்தின் ஆழத்திலிருந்து அழைக்கிறேன் நான்....
காடுவெட்டி கிராமத்தில் நாளை ஒன்று கூடுவோம்! pic.twitter.com/EHGWnO4qzA
"எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான்" என்று ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இந்நிலையில், குருவுக்காக மணிமண்டபம் காடுவெட்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனர் ராமதாஸ் திறந்து வைக்க இருக்கிறார். இதுகுறித்த ட்வீட் ஒன்றினையும் டாக்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், "பாட்டாளி சொந்தங்களே..... நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம் திறப்பு: இதயத்தின் ஆழத்திலிருந்து அழைக்கிறேன் நான்.... காடுவெட்டி கிராமத்தில் நாளை ஒன்று கூடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் ஒரு வீடியோவும் உள்ளது. அதில் குருவின் ஆரம்ப கால போட்டோக்கள், ராமதாசுடன் இணைந்து எடுத்து கொண்ட போட்டோக்கள், குருவின் முதல் பேச்சு போட்டோ, என அத்தனையும் இடம் பெற்றுள்ளது.
இன்றைய சூழலில், எத்தனையோ சலசலப்புகள் குருவின் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தாலும், அவரது குடும்பத்தினர் மத்தியில் இருந்தாலும் சரி.. தொண்டனுக்கு மணிமண்டபம் கட்டி மக்கள் தலைவராக ராமதாஸ் உயர்ந்து வருவதாகவே தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications