"குலோப் ஜாமூன்" புகழ் டாக்டர் ஷர்மிகா, விளக்கம் அளிக்க 24ம் தேதி வரை கெடு! காலக்கெடு நீட்டிப்பு ஏன்?
சித்த மருத்துவர் ஷர்மிகா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் சித்த மருத்துவர் ஷர்மிகா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நொங்கு சாப்பிட்டால் மர்பகம் பெரிதாகும், ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என்பது போன்ற கருத்துக்களை சமூக ஊடகங்களில் கூறியவர் மருத்துவர் ஷர்மிகா. இவர் மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்து வேஷ்டி அணிவது குறித்து பேசியது எல்லாம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
சித்த மருத்துவர் ஷர்மிகா பாஜகவை சேர்ந்த டெய்சி சரண் மகள் ஆவார். ஷர்மிகாவின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனிடையே ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில் குலோப் ஜாமூன் ஒன்று சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும் என்று சொல்லியது ஒரு ஹியூமன் எரர்தான் என்றும் சிறு தவறுதலா சொல்லிட்டேன் என்றும் எல்லா டாக்டரும் இப்படி பேசுறதுதான். இதுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்றும் ஷர்மிகா கூறினார்.

மார்பக புற்றுநோய்
குப்புறப் படுத்தா பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்று வரும் என்று கூறியது குறித்தும் விளக்கம் அளித்தார். அதுபற்றி கூறும் போது, குப்புறப் படுத்தா மார்பகப் புற்றுநோய் வரும் என்று சித்த மருத்துவத்தில் நேரடியா சொல்லவில்லை என்றும் ஆனால், அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் செல்லவேண்டும் என்பதால், நாம் அணியும் ஆடைகளை தளர்ந்து போடவேண்டும் என்றும் ஒருக்களித்துப் படுக்கவேண்டும் என்றும் 'நோயில்லா நெறி' புத்தகம் சொல்கிறது என்றார். எனவே மார்பக புற்றுநோய் வருவதற்கு 50 காரணங்கள் இருந்தால், அதில் இது ஒன்றும் இருக்கலாம் என்றும் இதை இப்படித்தான் சொல்லமுடியும் என்றும் ஷர்மிகா விளக்கம் அளித்தார்.

ஷர்மிகா ட்ரோல்
மேலும் சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் சொல்ல வேண்டும் என்றால் தான் மருத்துவமே பார்க்கமுடியாது என்றும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியில் கூறியிருந்தார். தவறான மருத்துவக்குறிப்புகளை சொல்வதாக என்று சோஷியல் மீடியாக்களில் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். மேலும் சித்த மருத்துவக் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ஷர்மிகாவுக்கு தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஷர்மிகா விளக்கம்
அதன் அடிப்படையில் சென்னை அரும்பாகத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்குநகரத்தில் தனது வழக்கறிஞருடன் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி சென்ற ஷர்மிகா, தான் சமூக ஊடகங்களில் பேசிய கருத்துக்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதுபற்றி இந்திய மருத்துவ துறை இயக்குனர் கணேசன் அப்போது செய்தியாளர்களிடம் கூறும் போது, நொங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்பது போன்றும், குப்புறப் படுத்தால் கேன்சர் வரும் என்பது போன்றும் சில கருத்துக்கள் இருந்தது. இதுபற்றி விளக்கம் கேட்டோம். ஷர்மிகா நம்மிடம் வாய்மொழியாக விளக்கம் கொடுத்தார்.எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 10ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

காலஅவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மேலும் அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் பிப்ரவரி 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்து கவுன்சில் அவகாசம் நீட்டித்துள்ளது. இதனிடையே சர்ச்சைக் கருத்துக்கள் தொடர்ந்து சமூக ஊடங்கள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக ஷர்மிகா வீடியோவும் வெளியிட்டார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு அதில் பதில் அளித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications